அனிருத் இசையில் பாடிய ராப்பர் வேடன் நெகிழ்ச்சி! | Rapper Vedan Shares Song Recording Experience with Anirudh

Spread the love

அவர், “என் இசைப் பயணத்தின் மிக முக்கியமான ஒரு மைல்கல்லை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

முதல் முறையாக, வரவிருக்கும் ‘DC’ திரைப்படத்திற்காக ‘ராக்ஸ்டார்’ அனிருத் ரவிச்சந்தருடன் இணைந்து ஒரு பாடலைப் பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இதற்கான பாடல் பதிவு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

அது என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவமாக அமைந்தது. தங்களின் இசையமைப்பால் லட்சக்கணக்கானவர்களைத் தூண்டி, தற்கால இந்தியச் சினிமாவின் இசையை மறுவரையறை செய்த அனிருத்துடன் இணைந்து பணியாற்றியது எனக்குக் கிடைத்த பெருமையாகவும், என் நீண்ட நாள் கனவு நனவானதாகவும் உணர்கிறேன்.

ராப் பாடகர் வேடன்

ராப் பாடகர் வேடன்

ஒவ்வொரு புதிய கூட்டணியும் நமக்கு ஏதாவது ஒரு புதிய பாடத்தைக் கற்றுக்கொடுக்கும். அந்த வகையில் இந்த அனுபவம் எனக்கு மிகவும் முக்கியமானது.

அனிருத் ஸ்டுடியோவிற்குள் கொண்டு வரும் அந்த எனர்ஜி, ஆர்வம் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை உண்மையிலேயே வியக்க வைக்கின்றன.

இந்தத் தனித்துவமான பாடலைப் பதிவு செய்த அனுபவத்தை என் வாழ்நாளில் நான் எப்போதும் போற்றி மகிழ்வேன். என் மீது நம்பிக்கை வைத்து, இந்த அற்புதமான வாய்ப்பை எனக்கு வழங்கிய ‘DC’ திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பகிர்ந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *