அனிருத் – காவ்யா திருமணம்: `பிரதமர் மோடி முதல் தனுஷ் வரை…’ – யாருக்கெல்லாம் அழைப்பு?! | Anirudh-Kavya Wedding: From PM Modi to Suraj Venjaramoodu – Who all have been invited!?

Spread the love

பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோருடன் பல மாநில முதல்வர்கள் மற்றும் பிரபல திரை நட்சத்திரங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய், தெலங்கானா முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி, ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு மற்றும் முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது.

திரைத்துறையிலிருந்து முன்னணி நடிகர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிநாத், ஏ.ஆர். ரஹ்மான், கமல்ஹாசன், தனுஷ் மற்றும் அஜித் குமார் – ஷாலினி தம்பதியர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் அல்லு அர்ஜுன் – சினேகா அல்லு ரெட்டி தம்பதி, சிவகார்திகேயன் – ஆர்த்தி தம்பதி, இயக்குநர் நெல்சன் திலீப்குமார், பிரசன்னா மற்றும் சூரஜ் வெஞ்சாரமூடு ஆகியோரின் பெயர்களும் இந்த பட்டியலில் உள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் காவ்யா மாறனுக்கு உள்ள தொடர்பால், கிரிக்கெட் உலகைச் சேர்ந்த பிரபலங்களும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *