அதனால் நீங்கள் கொடுத்த இந்த மனுவை அனுமனாக சுமந்து சென்று, ராமபிரானாக இருக்கும் முதல்வர் ஜோசப் விஜய்யிடம் சேர்ப்போம். உங்கள் கோரிக்கைகளை அவர் நிச்சயம் நிறைவேற்றித் தருவார்.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியைச் சேர்ந்தவர் என்பதால், இந்தக் கோரிக்கைகளை தனி கவனம் எடுத்து செய்து தருவார்” என்றனர். அதைக் கேட்ட வைத்திலிங்கம் உள்ளிட்ட புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள், அகமகிழ்ந்து அவர்களை வழியனுப்பி வைத்தார்கள்.
அதன்பிறகு அலுவலகத்தில் வந்து அமர்ந்த வைத்திலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள், `புதுச்சேரி அரசால் முடியாததை நாம் செய்யப் போகிறோம். நம் கட்சியின் தமிழக அமைச்சர்கள் அதை செய்து முடிப்பார்கள்.

அதற்கு நாம் கண்டிப்பாக தனி விழாவை எடுக்க வேண்டும்’ என்று மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டனர். அப்போது தமிழக அமைச்சர்கள் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்த ஒரு பேப்பரை எடுத்துப் பார்த்த அவர்கள், நொந்து போனார்கள்.
அது தமிழக அமைச்சர்களிடம் புதுச்சேரி காங்கிரசார் கொடுத்த கோரிக்கை மனு. அனுமனாக சுமந்து செல்வோம் என்று கூறிய தமிழக அமைச்சர்கள், அந்த மனுவை அங்கேயே வீசிவிட்டுச் சென்றிருந்தனர். அதில் ஏகத்துக்கும் அப்செட்டாகிக் கிடக்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.