நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு அளித்த பேட்டியில் அவர், “இன்றைய காலகட்டத்தில் வரும் பெரும்பாலான திரைப்படங்களில் ஒருவிதமான வண்ணமயமான லைட்டிங் முறையை நீங்கள் பார்க்க முடியும்.
ஆனால் என்னுடைய படங்களைப் பொறுத்தவரை, அந்த மேக்கிங்கில் தெரியும் வித்தியாசம் என்பது எனது குழுவினரின் தவறு கிடையாது.
அனைத்தும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புவதுதான் அதற்கு முக்கியமான காரணம். மேலும், என் மீது வைக்கப்படும் சில விமர்சனங்களுக்குப் பின்னால் வேறு சில காரணங்களும் உள்ளன.

அதை நான் கண்டறிந்துவிட்டேன். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை எழுதுவதையே சிலர் வேலையாகக் கொண்டுள்ளனர்.
மற்றவர்கள் அத்தகைய பதிவுகளைத் திரும்பத் திரும்பப் பார்த்து, அதன் தாக்கத்தால் அவர்களும் விமர்சிக்கத் தொடங்குகிறார்கள். இன்னும் சிலர், படத்தின் முதல் காட்சி முடிந்ததுமே குறிவைத்து எதிர்மறையாகப் பேசுகிறார்கள்.
சில இடங்களில் கலை இயக்கம் போன்ற விஷயங்களை நான் வேண்டுமென்றே கட்டுப்படுத்துகிறேன், ஏனென்றால் அப்போதுதான் காட்சிகள் நிஜமாக நடப்பது போன்ற உணர்வைத் தரும் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.