‘அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன், நான் எனது மனச்சாட்சிப்படியே.!’- ஸ்டாலின் உருக்கம்| M. K. Stalin has posted about his defeat.

Spread the love

234 சட்டமன்றத் தேர்தல்களில் தவெக 106 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தத் தேர்தலில் திமுக பின்னடைவை சந்திருக்கும் நிலையில் முதல்வர் வேட்பாளரான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். “கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம்.

தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.

வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே..!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன். அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *