தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிப் பண மோசடி செய்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை நேற்று (அக்டோபர் 26) சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்தக் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் சகோதரர் அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்துள்ள இந்தச் சர்க்கஸ் ஆட்சியாளர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டுப் போயிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் – விலைவாசி உயர்வு – த.வெ.க.வினரின் அட்டூழியங்கள் என இந்தக் கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும் – திசைத்திருப்பவுமே இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் டம்மி CM.
சகோதரர் அன்பில் மகேஸ் இந்தச் சூழலைச் சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார்.
வழக்கினாலும் – கைது நடவடிக்கைகளாலும் கழக உடன்பிறப்புகளை ஒருபோதும் அடக்க முடியாது.”