அன்று 15% இறக்கம்… இப்போது 15% ஏற்றம்… அதுதாங்க ஷேர் மார்க்கெட்டோட குணம்!

Spread the love

பொதுவாக, நம் வீட்டுக் குழந்தைகளை பிசினஸ் செய்ய நம்மில் பலரும் உற்சாகப்படுத்துவதில்லை. காரணம், அதில் இருக்கும் ரிஸ்க்தான். எந்த பிசினஸ் எப்படி நடக்கும், எந்த அளவுக்கு லாபம் தரும் என்பதைப் பலரும் துல்லியமாக முன்கூட்டியே சொல்ல முடியாது.

பிசினஸ் மட்டுமல்ல, பங்குச் சந்தை முதலீடும் அப்படிப்பட்டதுதான். பங்குச் சந்தையானது எந்த நேரத்தில் மேலே செல்லும் அல்லது கீழே செல்லும்; இந்த மேலே/கீழே என்பது எத்தனை சதவிகிதம் அளவுக்கு இருக்கும்; கீழே/மேலே போன சந்தை எப்போது மீண்டும் எதிர்திசையில் போகும் என்பதெல்லாம் பலராலும் கணிக்க முடியாத விஷயமாக இருப்பதால்தான், பலரும் இதில் முதலீடு செய்கிறார்கள்.

பங்குச் சந்தை

பங்குச் சந்தையில் பங்குகளை நேரடியாக வாங்குவது ரிஸ்க்-ஆன விஷயம். ஆனால், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்வது அதிக ரிஸ்க்-ஆன விஷயம் என்று சொல்ல முடியாவிட்டாலும், பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கத்தைப் பார்த்து, பலரும் பயந்துவிடுவதால்தான், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில்கூட மக்கள் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள்.

உலக அளவில் நிகழும் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதிப்புகளின் காரணமாகவோ அல்லது இந்திய அளவில் நிகழும் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதிப்புகளின் காரணமாகவோ, பங்குச் சந்தை மேலே அல்லது கீழே செல்லும். இந்தக் காரணங்களைப் புரிந்துகொள்ளாமல், பங்குச் சந்தை மேலே செல்லும்போது மிகவும் சந்தோஷப்படுவதும், கீழே செல்லும்போது மிகவும் வருத்தம் அடைந்து, முதலீட்டைத் திரும்ப எடுத்துவிடுவதும் புத்திசாலித்தனமான விஷயமாக இருக்காது.

பங்குச் சந்தையின் இயற்கையான குணமே உலக நிகழ்வுகளின் காரணமாக கீழே செல்லும்; பிறகு மீண்டும் மேலே வந்துவிடும் என்பதைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் சந்தையின் செயல்பாட்டை வைத்து நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

பங்குச் சந்தை

கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பரில் பங்குச் சந்தை உச்சத்தில் இருந்து கீழே இறங்கத் தொடங்கியது. அடுத்த ஐந்து மாதங்களில் நிஃப்டி 16%, சென்செக்ஸ் 15%, நிஃப்டி மிட்கேப் 150 இன்டெக்ஸ் 21%, நிஃப்டி ஸ்மால் கேப் இன்டெக்ஸ் 250 இன்டெக்ஸ் 26%, நிஃப்டி 500 இன்டெக்ஸ் 19% இறக்கம் கண்டன.

ஆனால், மார்ச் 2025-ஆம் ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான பங்குச் சந்தை மேலே வருவதும் மீண்டும் சறுக்கி கீழே செல்வதுமாகத்தான் இருந்தது. கடந்த எட்டு மாதங்களில் பங்குச் சந்தையின் சரிவுக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது அமெரிக்க – ஈரான் போர்.

ஆனால், அந்தப் போர் பதற்றம் ஓரளவுக்குக் குறைந்துள்ள நிலையில், பங்குச் சந்தை மீண்டும் மேலே வந்திருக்கிறது. உதாரணமாக, கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சந்தை மிக குறைந்த புள்ளிகளில் இருந்த நிலையில் இருந்து தற்போது செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் எவ்வளவு வளர்ச்சி கண்டுள்ளது தெரியுமா? சென்செக்ஸ் குறியீடு 15%, நிஃப்டி குறியீடு 17%, நிஃப்டி மிட்கேப் 150 குறியீடு 27%, நிஃப்டி ஸ்மால் கேப் 250 குறியீடு 28%, நிஃப்டி 500 குறியீடு 21% உயர்ந்து லாபம் தந்திருக்கிறது.

பங்குச் சந்தை

கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் பங்குச் சந்தை முதலீட்டில் 15% முதல் 26% நஷ்டம் அடைந்தவர்கள் இப்போது, 15% முதல் 28% வரை லாபம் பார்த்திருக்கிறார்கள். பங்குச் சந்தையின் இறக்கத்தைப் பார்த்து, ‘அட, இது தப்பான விஷயமா இருக்கே!’ என்று நஷ்டத்துடன் முதலீட்டைத் திரும்ப பெற்றவர்கள், நஷ்டத்துடனே வெளியேறி இருப்பார்கள். ஆனால், பங்குச் சந்தை என்பதே ஏற்ற, இறக்கத்துடன்தான் இருக்கும் என்று புரிந்துகொண்டு முதலீட்டைத் தொடர்ந்து வைத்திருந்தவர்கள், இன்று நஷ்டத்தைத் தவிர்த்து, லாபத்தில் இருப்பார்கள்.

ஆக, பங்குச் சந்தை முதலீடு என்பதே ஏற்ற, இறக்கத்துடன்தான் இருக்கும். பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்தால், பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தை அடைவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. இந்த வருமானம் 10% முதல் 12% வரை இருக்க வாய்ப்பு உண்டு என்பதுதான் முக்கியமான விஷயம். எனவே, பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கத்தை ஒரு நெகட்டிவ்-ஆன அம்சமாகப் பார்க்காமல், அதுதான் அதன் இயல்பான, இயற்கையான குணம் என்பதைப் புரிந்துகொண்டு, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அவசியத்திலும் அவசியம்!

லாபம்

மியூச்சுவல்   ஃபண்டில்   முதலீடு   செய்ய   வேண்டுமா?

மியூச்சுவல் ஃபண்டில் SIP மற்றும் Lump sum முதலீட்டை ஆரம்பிக்க நினைப்பவர்கள் லாபம் நிறுவனத்தின் பின்வரும் தொலைபேசி எண்களை அழைக்கலாம்!

ஏ.ஆர்.குமார் – 89259 44568

சபரிநாதன் – 89259 44569

தங்கலட்சுமி – 95007 77894

வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டைச் சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்…

வெளிநாட்டில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

இந்தியாவில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

Labham Youtube Channel: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!

Vikatan Wealth Pvt Ltd – ARN – 310095

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *