‘அன்றைக்கு கிண்டல் பேசிய ரஜினிகாந்த்; ஹலோ மிஸ்டர் எக்ஸ் சீஃப் மினிஸ்டர்.!’-வைகோ பேசியதென்ன? | mdmk vaiko slams dmk

Spread the love

நெல்லையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

“முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் நம் ஊரில் அல்லாமல் பல்லாயிரம் மையில் கடந்து கிரேக்க நாட்டில் பல்லாயிரம் கோடி செலவழித்து கல்யாணத்தை நடத்தியிருக்கிறார்களே இதைப் பற்றி எந்தத் தொலைக்காட்சியும் வெளியிட ஏன் முன் வரவில்லை.

அன்றைக்கு ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் கல்யாணத்தைப் பற்றி மாதக்கணக்கில், வருடக்கணக்கில் இழிவுப்படுத்தினீர்கள்? அன்றைக்கு கிண்டல் பேசிய ரஜினிகாந்த், இழிவுப்படுத்திய சன் தொலைக்காட்சி இப்படி ஒரு கல்யாணத்தை நடத்தியது எப்படி நியாயம் ஆகும்” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பேசிய வைகோ, ” 6 மாதம் தான் தவெக ஆட்சி நீடிக்கும் என்று ஒரு பெரிய தலைவர் சாபமிடுகிறார். ஹலோ மிஸ்டர் எக்ஸ் சீஃப் மினிஸ்டர் இந்த ஆட்சி 6 மாதம் தான் நீடிக்குமா? இல்லை முழுவதுமாக நீடிக்கும்.

அடுத்து தேர்தல் நடந்தால் 30 சதவிகித சீட்டை விஜய் அதிகமாக ஜெயிப்பார். இந்த வைகோ ஊர் ஊராகச் சென்று அவர்களை ஜெயிக்க வைப்பான். வரும் இடைத்தேர்தலில் தவெக ஜெயிக்கும். நீங்கள் எத்தனை பொய் பிரசாரம் செய்தாலும் அதனைத் தூள் தூளாக்குவதற்கு இந்த வைகோவும், மதிமுகவும் இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *