அபுதாபி: பாகிஸ்தான் $3.45B கடன் திருப்பிச் செலுத்திய பின்னணி|Pakistan Repays $3.45B UAE Loan Amid Economic Strain

Spread the love

ஐக்கிய அமீரகத்தில் இருக்கும் அபுதாபியின் வெளிநாட்டு உதவி நிறுவனம், “அபுதாபி மேம்பாட்டு நிதியம் (ADFD)’.

‘The Dawn Newspaper’ தகவலின்படி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இந்த நிதியத்திடமிருந்து 2019-ம் ஆண்டு இந்தக் கடனை வாங்கியிருக்கிறது பாகிஸ்தான்.

ஈரான் போரினால் தற்போது மத்திய கிழக்கு நாடுகள் அரசியல் தொடங்கி பொருளாதாரம் வரை பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன.

இதனால், அபுதாபி மேம்பாட்டு நிதியம் பாகிஸ்தானிடம் அவர்கள் வாங்கியிருந்த மொத்த கடன் தொகையையும் திருப்பிச் செலுத்துமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, பாகிஸ்தானின் மத்திய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தான், மொத்த கடன் தொகையான 3.45 பில்லியன் டாலர்களையும் அந்த நிதியத்திற்கு திருப்பிச் செலுத்தியிருக்கிறது.

திருப்பி செலுத்தப்பட்டுள்ளது

இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தான் தனது எக்ஸ் பக்கத்தில், “அபுதாபி வளர்ச்சி நிதியத்திற்கு செலுத்தவேண்டிய 1 பில்லியன் அமெரிக்க டாலர் டெபாசிட்டை, பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி ஏப்ரல் 23, 2026-ம் தேதி திருப்பிச் செலுத்தியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *