“அப்போது என் பொருளாதார நிலை மோசமாகும் வரை மகிழ்ச்சியாக இருந்தேன்!” – கீர்த்தி சுரேஷ் |keerthy-suresh-opens-up-about-six-month-career-break-finances-after-mahanati

Spread the love

இது குறித்துப் பேசிய கீர்த்தி சுரேஷ், ” ‘மகாநடி’ படத்திற்குப் பிறகு இயக்குநர்களுக்கு என்னை எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பது என்பதில் ஒரு குழப்பம் இருந்தது.

‘மகாநடி’ போன்ற ஒரு படத்திற்குப் பிறகு எனக்கு இன்னும் பெரிய, கதாபாத்திரங்களையே கொடுக்க வேண்டும் என்று அவர்கள் யோசித்திருக்கலாம்.

ஆரம்பத்தில் தொடர்ச்சியான படப்பிடிப்புகளில் இருந்து எனக்கு ஒரு இடைவெளி கிடைத்தது மகிழ்ச்சியாகவே இருந்தது.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

ஆனால், நாட்கள் செல்லச் செல்லத்தான் என்னுடைய நிதி நிலைமை பாதிக்கப்படுவதை உணர்ந்தேன்.

ஆனால் அந்த இடைவேளைதான், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது.

இந்த 6 மாத இடைவெளியில்தான் முதன்முதலாக உடற்பயிற்சி செய்யத் தொடங்கி, எனது உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தத் தொடங்கினேன். அது பல பாடங்களைக் கற்றுக்கொடுத்தது.” என்று பேசியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *