நான்கு பதில்கள்…
என்ன நடந்தது, ஏன் இப்படி நடந்தது என்பது குறித்து கட்சிக்குள் ஏராளமான விவாதங்கள் எழும்.
2024-ம் ஆண்டு ட்ரம்பிற்கு வாக்களித்த பலர் இப்போது கோபத்தில் இருப்பதையும், ஜனநாயகக் கட்சியினருக்கு வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளதையும் ஒரு கருத்துகணிப்பாளர் கூறினார்.
இந்த வாக்காளர்களை மீண்டும் குடியரசுக் கட்சிக்குத் திருப்ப நான்கு பதில்கள் தான் உள்ளன.
1. போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்,
2. பணவீக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்,
3. அமெரிக்காவிற்கே முதலிடம் தர வேண்டும்,
4. இஸ்ரேலுடனான நமது உறவை மாற்றியமைக்க வேண்டும்.
நமது வாக்காளர்கள் வாக்களிக்க வந்தார்கள். ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட 4 காரணங்களால்தான் அவர்களில் பலர் ஜனநாயகக் கட்சியினருக்கு வாக்களித்துவிட்டனர்.
தேர்தல் முடிவுகளை மிகத் துல்லியமாகக் கணித்த ஒரு கருத்துக்கணிப்பாளரின் கூற்று இது” என்று பதிவிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே, ஜே.டி.வான்ஸ் ஈரான் போருக்கு எதிராக தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.