அமெரிக்காவில் விமானத்தில் 3 சீட்டுகளை முன்பதிவு செய்து நாயுடன் பயணித்த இன்ஃப்ளூயன்சர் பீட்ரா லூகாஸ் | Petra Lucas, an influencer who traveled on a plane in the US with her dog after booking 3 seats

Spread the love

International

oi-Velmurugan P

நியூயார்க்: அமெரிக்காவில் இன்ஃப்ளூயன்சர் பீட்ரா லூகாஸ் விமானத்தில் 3 சீட்டுகளை முன்பதிவு செய்து தனது பிரம்மாண்டமான கிரேட் டேன் நாயுடன் பயணம் செய்த நிகழ்வு சமூக ஊடகங்களில் மீண்டும் பரவி வருகிறது. அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பீட்ரா லூகாஸ் அழைத்துச் சென்றார். அந்த நாய் மனிதர்களைப் போல இருக்கையில் அமர்ந்து பயணித்த வீடியோ விமான விதிகள் குறித்து விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஒரு பிரபலமான பிரேசிலிய மாடல், பிட்னஸ் மற்றும் லைஃப்ஸ்டைல் டிஜிட்டல் இன்ஃப்ளூயன்சர் தான் பீட்ரா லூகாஸ்.. இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். அத்துடன் டிக்டாக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களிலும் அதிகமானோர் இவரை பின்தொடர்கிறார்கள்.

Petra Lucas an influencer who traveled on a plane in the US with her dog after booking 3 seats

இவர் முக்கியமாக பிட்னஸ் , ஃபேஷன் டிசைன், டிராவில் செய்த வீடியோக்கள் மற்றும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர வாழ்க்கை முறை சார்ந்த வீடியோக்களை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவரது வீடியோ 2கே, ஜென் சி கிட்ஸ் மத்தியில் ஏகே பிரபலம் ஆகும். இவருடைய சகோதரி புரூனா லூகாசும் டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான மாடல் ஆக இருககிறார்.

பீட்ரா லூகாஸ் அண்மையில் கிரேட் டேன் ரக நாய் ‘சார்லி’ உடன் விமானத்தில் பயணித்த வீடியோ இணையத்தில் பரவியது.அதன் மூலமே இவர் உலக அளவில் கவனம் ஈர்த்தார். தனது நாய்க்காக 3 சீட்டுகளை விமானத்தில் முன்பதிவு செய்திருந்தார். அந்த சீட்டுகளில் நாயுடன் பயணித்து கவனத்தை ஈர்த்தார். இவர் தனது நாயுடன் கெத்தாக விமானத்தில் ஏறி பயணிக்கும் வீடியோவை பார்த்து பயணிகள் மற்றும் நெட்டிசன்கள் வாயடைத்து போனார்கள். அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் அழைத்துச் சென்றார். அந்த நாய் மனிதர்களைப் போல இருக்கையில் அமர்ந்து பயணித்த வீடியோ, விமான நிறுவனங்களின் விதிகள் குறித்தும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக விமானத்தில் நாயை அழைத்துச் செல்ல முடியும் என்றாலும், அதற்கான விதிகளும் கட்டுப்பாடுகளும் மிகவும் கடுமையானவை. நாய் மற்றும் செல்லப் பிராணிகளை விமானத்தில் பயணிகளின் அருகில் வைத்து அழைத்து செல்ல வேண்டும் என்றால் அந்த நாயின் எடைன் கூண்டின் எடையும் சேர்த்து 5 முதல் 8 கிலோவிற்குள் இருக்க வேண்டும். அதை விமான பயணத்தின் போது பயணியின் சீட்டின்முன்பகுதியில் உள்ள இருக்கைக்கு அடியில் வைக்கக்கூடிய சிறப்பு கூண்டிற்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

ஆனால் பீட்ரா லூகாஸ் வைத்துள்ள நாய் மிகப்பெரியது. அவை வழக்கமான கேபின் விதிகளின்படி அனுமதிக்கப்படுவது இல்லை. ஆனால் சில அமெரிக்க மற்றும் சர்வதேச விமான நிறுவனங்களில், கூடுதல் இருக்கைகளை அதிகக் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து, சிறப்பு அனுமதி பெற்று அழைத்துச் செல்ல அனுமதி அளிக்கின்றன.

அப்படி என்றால் எல்லா நாயையும் அழைத்து செல்ல முடியுமா என்றால், வாய்ப்பே கிடையாது. அவை சேவை நாய்களாக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அல்லது பார்வைத் திறனற்றவர்களுக்கு உதவும் ‘சர்வீஸ் டாக்ஸ்’ போன்றவையாக இருக்க வேண்டும். அவை சக மனிதரை தொந்தரவே செய்யாத சேவை செய்யும் நாய் என்பதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் சிறப்பு அனுமதி தரப்படுகிறது. எனினும் ரேபிஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்டுப்பாட்டுத் தடுப்பூசிகளும் போடப்பட்டதற்கான சான்றிதழ் அவசியம் ஆகும். அதேபோல் கால்நடை மருத்துவரிடமிருந்து நாய் ஆரோக்கியமாக உள்ளது என்று பெறப்பட்ட சான்றிதழும் அவசியம் ஆகும். அதேபோல் நாயின் வாயில் கூண்டு வடிவ வளையம் (மசில்) வைக்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *