அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் நீடிக்கிறது: ஈரான் ராணுவ அறிவிப்பால் பதற்றம் – Kumudam

Spread the love

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் நிறுத்தம் மே 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் முக்கிய நிபந்தனையான அணுசக்தி திட்டம் குறித்த விவாதத்தை தற்போதைக்கு ஒத்திவைக்கலாம் என்று ஈரான் தெரிவித்துள்ளது. 

ஆனால், அமெரிக்கா இதனை ஏற்க மறுத்துள்ளது. மேலும், ஹார்முஸ் நீரிணையை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் பல வியூகங்களை வகுத்து வருகிறது. அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், தற்போதைய நிச்சயமற்ற சூழலில் மேற்கத்திய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா உறுதியாக நிற்க வேண்டும் என்று வலியுறுத்தாக தெரிகிறது. 

அப்போது, ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது என்ற கருத்தில் மன்னர் சார்லஸ் உடன்படுவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவுடன் தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும், மேற்காசியாவில் இன்னும் போர் நீடிப்பதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி,  ராணுவத் தயார்நிலை தொடர்வதாகவும், இலக்குகள் மற்றும் உபகரணங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் செய்தித் தொடர்பாளர் அமீர் அக்ராமினியா தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *