அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை குறித்து பாகிஸ்தான் பிரதமர் |Pakistan Prime Minister on US-Iran talks

Spread the love

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையே இறுதி செய்யப்பட்ட அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் கத்தார் நாட்டுடன் இணைந்து பாகிஸ்தானும் செயல்பட்டு வருகிறது.

Pakistan PM - Shahbaz Sharif

Pakistan PM – Shahbaz Sharif

இது குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், “பாகிஸ்தானின் தீவிரமான முயற்சிகளுக்கு மத்தியில், இந்த அமைதி ஒப்பந்தத்தைக் கெடுக்க நினைப்பவர்களால் பரப்பப்படும் தொடர்ச்சியான வதந்திகள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்கள் குறித்து நாங்கள் முழுமையாக அறிவோம்.

அந்த தேவையற்றதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, அமெரிக்கா – ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தத்தின் இறுதி வடிவம் எட்டப்பட்டுவிட்டதை எங்களால் உறுதிப்படுத்த முடியும்.

அடுத்தகட்ட நகர்வுகளை இறுதி செய்யப் பாகிஸ்தான் இப்போது இரு தரப்புடனும் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. அமைதி என்பது இதற்கு முன்பு எப்போதும் இந்த அளவுக்கு மிக அருகில் இருந்ததில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *