India
oi-Nantha Kumar R
அமராவதி: அரசு பள்ளிக்குள் நுழைந்து 10ம் வகுப்பு மாணவியை மரம் அறுக்கும் இயந்திரம் கொண்ட வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் 21 வயது இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள பள்ளி புகுந்து மாணவியை வெட்டி கொல்ல முயன்றது ஏன்? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ராப்தாடு மண்டல் மாவட்ட பரிஷத் உயர்நிலை பள்ளியில் உள்ளது. இந்த பள்ளியில் அய்யவரிபள்ளி கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் தான் இன்று காலையில் 10ம் வகுப்புக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அய்யவரிபள்ளி கிராமத்தை சேர்ந்த மாணவியை மரம் அறுக்கும் இயந்திரத்தால் வெட்டினார். தடுக்கப்போன மாணவி மீதும் தாக்குதல் நடத்தினார். இதில் இருமாணவிகளும் காயமடைந்த நிலையில் அந்த இளைஞர் அங்கிருந்து ஓடினார்.
இந்த சம்பவத்தில் மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட மாணவி படுகாயமடைந்துள்ளார். இன்னொரு மாணவி லேசான காயமடைந்துள்ளார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இளைஞர் ஒருவர் பள்ளிக்குள் நுழைந்து மரம்வெட்டு கருவியால் மாணவியை வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் மாணவியை மரம் அறுக்கும் இயந்திரத்தால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைதான நபரின் பெயர் ஹேமந்த். வயது 21. சொந்த ஊர் தர்மாவரம் அருகே உள்ள நாகலுரி கிராமம். இவருக்கு அம்மா – அப்பா கிடையாது. இருவரும் இறந்துவிட்டனர். இதனால் ஹேமந்த் தனது அக்காள் வீட்டில் வசித்து வந்தார். அக்காள் வீடு அய்யவரிபள்ளி கிராமத்தில் உள்ளது.
தற்போது மரம் அறுக்கும் கருவியால் வெட்டப்பட்ட மாணவியும் அய்யகரிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தான். இருவரும் தூரத்து உறவினர்கள் என்று சொல்லப்படுகிறது. ஒரே கிராமம் இருப்பதால் ஹேமந்துக்கு 10ம் வகுப்பு மாணவி மீது காதல் வந்துள்ளது. இதனால் மாணவியுடன் நெருங்கி பழக விரும்பினார். ஆனால் மாணவி அதற்கு தடை போட்டதோடு, அவரது காதலை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும் ஹேமந்த் விடவில்லை. தொடர்ந்து மாணவியை விரட்டி விரட்டி காதலை ஏற்கும்படி தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் மாணவி மனம்மாறவில்லை. இதனால் கோபமடைந்த மாணவி தனக்கு காதல் தொல்லை தந்தால் அதுபற்றி பெற்றோரிடம் கூறிவிடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹேமந்த், மாணவியை மரம் அறுக்கும் இயந்திரம் கொண்டு வெட்டி கொல்ல முயன்றது தெரியவந்துள்ளது.