அயலக மாணவர் விவகரம்: “அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன்” – சமூக நீதித்துறை அமைச்சகம் பதில்! |Foreign student issue: “With the intent to tarnish the reputation” – Ministry of Social Justice responds!

Spread the love

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற பாரதிதாசன் என்ற மாணவர், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தாம் மிகவும் சிரமப்படுவதாக ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இந்த விவகாரம் சட்டமன்றத்திலும் பேசப்பட்டது. அதன் பிறகும் கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை எனவும், மாணவர் மீதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில், அரசு தரப்பிலிருந்து மாணவருக்கு, `நீ ஆராய்ச்சிக்கான உபகரணங்கள் வாங்குவதற்காகத்தான் நிதி கேட்கிறாயா?” என்பன போன்ற கேள்விகளுடன் மாணவர் பாரதிதாசனுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருக்கிறது.

அயலக மாணவர் பாரதிதாசன்

அயலக மாணவர் பாரதிதாசன்

இதனால் தளர்வடைந்த மாணவர், `நான் எல்லா ஆதாரத்துடனும், என் ஆசிரியர் நான் வாங்க வேண்டிய உபகரணங்கள் குறித்து எனக்கு கொடுத்த பட்டியல்களையும் ஆதாரப்பூர்வமாக அனுப்பியிருந்தேன். அதன்பிறகும் அரசு முதலிருந்து தொடங்குகிறது.

என் மீது என் ஆசிரியர்கள் வைத்த நம்பிக்கையை உடைத்திருக்கிறீர்கள். உங்கள் அதிகாரத்தால் ஒடுக்க நினைக்கிறீர்கள். ரோஹித் வெமுலாவுக்கு நடந்தது எனக்கும் நடக்கிறது” எனக் குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டிருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *