அதைத் தொடர்ந்து, முதல்வர் விஜயின் உரைக்கு பதிலளித்த தி.மு.க எம்.பி.ஆ.ராசா, “ நூலிழை பெரும்பான்மையில் ஆட்சி அமைத்துவிட்டு, தனித்து பெரும்பான்மை பெற்றது போல விஜய் திருச்சியில் கத்தி, வீணான வீரவசனம் பேசியுள்ளார். முதலமைச்சர் நாற்காலியின் தகுதிக்குக் குறைவான, அரசியல் சட்ட ஒழுக்கமற்ற பேச்சு இது. சட்டமன்றத்திற்குள் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் பேப்பரைப் பார்த்துப் பதுங்கிய முதலமைச்சர் விஜய், வெளியே வந்து நக்கல், நையாண்டியுடன் கர்ஜிப்பது போல நினைத்து கத்திக்கொண்டிருக்கிறார்.
அ.தி.மு.க உள்ளிட்ட பிற கட்சிகளை ‘அல்லு சில்லு’ என விமர்சிக்கும் விஜய், அதே கட்சிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கெஞ்சிக் கூத்தாடி ஆதரவு பெற்றுத்தான் ஆட்சியைத் தக்கவைத்துள்ளார். தமிழ் தாய் வாழ்த்து, மும்மொழி கொள்கை, EWS இட ஒதுக்கீடு எதிர்ப்பு ஆகியவற்றில் தி.மு.க-வின் உறுதியான நிலைப்பாடுதான் ஸ்டாலின் சார் ஆட்சியின் வலிமை. ஆளுநரின் செயல்களையோ, பாசிசத்தையோ எதிர்க்கும் துணிச்சல் உங்களிடம் இருக்கிறதா?