ஆனால், சில மூத்த அமைச்சர்களின் எதிர்ப்பு காரணமாக, ‘பொதுத் துறைகளுக்கு ரூ.25 லட்சம் எனவும், கட்டுமானம், உள்கட்டமைப்பு மற்றும் மாநகராட்சி போன்ற அமைப்புகளுக்கு ரூ.50 லட்சம் வரை ஓபன் டெண்டர் வேண்டாம்’ என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக, ரூ.50 லட்சம் மேல் உள்ள பணிகள் மட்டுமே மின்னணு ஒப்பந்தப் புள்ளி (e-Tender) முறைக்குக் கொண்டு வரப்பட்டன.
இது ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தாலும், ரூ50 லட்சம் கீழ் உள்ள பணிகளை எளிதாகக் கையாள முடிந்ததால், அந்தப் பிரிவில்தான் அதிகப்படியான முறைகேடுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகின.

50 லட்சம் ரூபாய் வரையிலான பணிகளை ஓபன் டெண்டர் இல்லாமல் கொட்டேஷன் அல்லது லிமிடெட் டெண்டர் முறையில் விடுவதால் மிக மோசமான தாக்கங்கள் ஏற்படும். இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். தற்போதைய அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற புதிதில், `முந்தைய ஆட்சியில் விடப்பட்ட சில ஒப்பந்தங்களை நாங்கள் ரத்து செய்தோம்.