முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் அரசின் கவனத்திற்கு முக்கியமான ஆறு கோரிக்கைகளைக் கொண்டு செல்ல விரும்புகிறேன் என்று இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “லஞ்சம் மற்றும் கையூட்டு போன்ற சகஜமாகிப்போன நடைமுறைகளை எல்லாம் முழுவதுமாக விரட்டி விட முடியும் என்ற நம்பிக்கையைத் தந்து கொண்டிருக்கும் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசின் கவனத்திற்கு இந்த முக்கியமான ஆறு கோரிக்கைகளைக் கொண்டு செல்ல விரும்புகிறேன்.
1. அரசுத் திரையரங்குகள்
கேரளாவின் KSFDC பாணியில், எளிய தயாரிப்பாளர்களின் திரைப்படங்களுக்காக அரசுத் திரையரங்குகள் அமைக்கப்பட வேண்டும். இது தியேட்டர் கிடைக்காமல் முடங்கிப்போகும் நல்ல கதையம்சம் கொண்ட சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய வாழ்வாதாரமாக அமையும்.

2. திரைப்பட ரசனைக் கல்வி
பள்ளி மற்றும் கல்லூரிகளில் திரைப்பட ரசனைக் கல்வி (Film Appreciation) கொண்டுவரப்பட வேண்டும். சினிமாவை ஒரு கலையாகப் புரிந்துகொள்ளும் பக்குவத்தை இது இளம்தலைமுறையினரிடம் உருவாக்கும்.
3. உலகத் திரைப்பட மாநாடு
தமிழ்ச் சங்க மாநாட்டைப் போல, தமிழகத்தில் உலகளாவிய திரைப்பட மாநாடு நடத்தப்பட வேண்டும். இது தமிழ்த் திரைக் கலைஞர்களையும் உலகத் தரம் வாய்ந்த படைப்பாளிகளையும் ஒரே தளத்தில் இணைக்க உதவும்.