‘அரசுப் பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது ஏன்?’- தவெக அரசுக்கு சீமான் கேள்வி| ntk seeman slams tvk government for Government Jobs Filled on a Temporary Contract Basis?

Spread the love

அரசுப் பணிகளில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்களை மட்டுமே நியமிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் உள்ள அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கடைநிலை ஊழியர்கள் முதல் மேலாளர் நிலை வரையிலான பணிகளுக்கு தற்காலிக பணியாளர்களைத் தேர்வு செய்ய வெளிநாட்டு மனிதவளக் கழகத்தை (Overseas Manpower Corporation Limited) முகமையாக நியமித்து, அரசுப் பணியாளர்களை இனி தற்காலிக ஒப்பந்த பணியாளர்களாக மட்டுமே நியமிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

இதுதான் தவெக அரசு ஏற்படுத்திய மாற்றமா?

அரசுப் பணி கனவுடன் பல ஆண்டுகளாகப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி, தங்களது இளமையையும் உழைப்பையும் செலவிட்டு காத்திருக்கும் தமிழக இளைஞர்களுக்கு போட்டித் தேர்வு மூலம் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி, நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அரசு, இருக்கின்ற அரசுப் பணியிடங்களையும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது ஏன்? இதுதான் தவெக அரசு ஏற்படுத்திய மாற்றமா? இதற்கு பெயர்தான் தூயசக்தியா?

அரசுப் பணிகளையே வெளிமுகமை வழியாக நிரப்ப முற்படுவது, அரசுப்பணிக்காக இரவுபகல் பாராமல் படித்து, அயராது முயலும் இலட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தினை இருளாக்கும் கொடுஞ்செயல் இல்லையா? தமிழக இளைஞர்கள் பட்டப்படிப்புகளைப் படிப்பது எதற்காக? தங்கள் தகுதிகளை வளர்த்துக்கொள்வது எதற்காக? இரவு பகல் பாராது அரசுப் பணிக்காக உழைப்பது எதற்காக?

நிரந்தர வேலை வாய்ப்புக்காகதானே? அதைக்கூட தவெக அரசால் தரமுடியாமல், இருக்கும் வாய்ப்பையும் தடுத்து கெடுப்பது என்ன நியாயம்? தவெக அரசு ஆட்சிக்கு வந்தது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கா? அல்லது இருக்கின்ற வேலைவாய்ப்புகளைக்கூட நிரந்தரமற்றதாக மாற்றுவதற்கா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *