பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு மெரினாவில் தொடங்கி, விருதுநகர், குடியாத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் காங்கிரஸ் கட்சியால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இந்த விழாக்களின் ஒரு பகுதியாக, “லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்” மற்றும் “கரைபடியாத கைகள்” ஆகிய பிரசாரங்களின் மூலம் மக்களையும், குறிப்பாக இளைஞர்களையும் பெருமளவில் பங்கேற்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழா தொடர்பான ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர், “ஏழை எளிய மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக காமராஜர் ஓராசிரியர் பள்ளிகளைத் தொடங்கி, மதிய உணவுத் திட்டத்தையும் தந்தார்.
தற்போது பள்ளிகளில் தேவையில்லாத ஆய்வுகளைத் தவிர்ப்பது மற்றும் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளைத் தடை செய்வது போன்ற பள்ளி கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. அதே வேளையில், போதிய மாணவர்கள் சேர்க்கை இல்லாத காரணத்தால் அரசுப் பள்ளிகள் மூடப்படுவதாக வரும் தகவல்கள் மிகுந்த கவலையளிக்கின்றன.