அரசுப் பேருந்துகளில் புதிய விதிகள்: ஸ்பீக்கர், உரத்த சத்தத்திற்கு தடை|No Speaker Mode on Buses: Tamil Nadu’s New Travel Rules

Spread the love

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பயணிகள் சுமுகமாகப் பயணிக்க சில நெறிமுறைகளைக் கூறி, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் அனைத்து மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்களுக்கு போக்குவரத்துத்துறை அரசுச் செயலாளர் நிர்மல்ராஜ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

என்னென்ன நெறிமுறைகள்?

> அரசுப் பேருந்துகளில் உரத்த ஒலியில் இசை ஒலிக்கப்படாமல் இருப்பதை ஓட்டுநர் உறுதி செய்ய வேண்டும்.

> பயணத்தின்போது, கைப்பேசியில் உரத்த குரலில் பேசுவது, கைப்பேசியில் உள்ள ஸ்பீக்கரைப் பயன்படுத்துவது, இயர்போன் அல்லது ஹெட் போன் இல்லாமல் கைப்பேசியில் பாடல் கேட்பது, வீடியோ பார்ப்பது போன்றவைக் கூடாது.

> அரசுப் பேருந்துகளின் உட்புறத்தில் பயணிகளுக்குத் தெளிவாகத் தெரியும் வகையில், “கைப்பேசியில் ஸ்பீக்கர் ஒலி வேண்டாம்!’ என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும். இந்த ஸ்டிக்கர் பேருந்தின் உட்புறம், நடுப்புறம், வெளிப்புறம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

> இந்த வழிமுறைகளை பயணிகள் தவறாமல் கடைப்பிடிப்பதைப் பணி நேரத்தின்போது டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *