அரசு பள்ளி சர்ச்சை: ஆங்கில விமர்சனத்திற்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம்|’I Studied in a Government School’: Keerthana Hits Back at Critics

Spread the love

தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா. அவர் சமீபத்தில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் மாணவி ஒருவருக்கு ஆங்கிலம் வரவில்லை என்று ஆசியரிடம் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்தச் சர்ச்சைக்குப் பதிலளிக்கும் விதமாக, கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று சிலர், “அரசுப் பள்ளி மாணவியைக் கேலி செய்தார்” என்று ஒரு பொய்யான கதையைப் பரப்புகிறார்கள்.

அமைச்சர் கீர்த்தனா

அமைச்சர் கீர்த்தனா

உண்மை என்ன தெரியுமா? நானே ஒரு அரசுப் பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள்.

இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னைக் கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல… என்னைப் போன்ற அரசுப் பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள்.

நான் பள்ளியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் தமிழில்தான் படித்தேன். எனக்கு இரண்டாம் மொழியாக பிரெஞ்ச் படிக்கும் வாய்ப்போ, உயர்தர தனியார் பள்ளியில் படிக்கும் வசதியோ இல்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *