அரியலூர் மாவட்டம் வாரணவாசி கல்யாண சுந்தர விநாயகர் : வாழைப்பழ மாலை தரும் உத்தியோக யோகம்! | varanavasi kalyanasundara vinayagar temple

Spread the love

விநாயகரை வழிபட்டால் வேண்டும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும். அப்படிப்பட்ட விநாயகப்பெருமானின் கோயில் இல்லாத ஊர் ஏது?

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கோலத்தில் அருள்பாலிக்கும் விநாயகப்பெருமான் வாரணவாசியில் கல்யாண சுந்தர விநாயகராக அருள்பாலிக்கிறார்.

அரியலூருக்கு அருகில் அமைந்துள்ளது வாரணவாசி. இங்குள்ள அருள்மிகு கல்யாணசுந்தர விநாயகர் ஆலயம் பிரசித்திபெற்றது. உள்ளூரில் உள்ள பக்தர்கள் தங்களுக்கு ஏதேனும் குறையிருந்தால் இந்த விநாயகரிடம் வந்து முறையிடுகிறார்கள்.

அப்படி இவர் முன் வைத்த வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுகின்றன என்கிறார்கள் பக்தர்கள்.

வாரணவாசி கல்யாண சுந்தர விநாயகர் கோயில்

வாரணவாசி கல்யாண சுந்தர விநாயகர் கோயில்

தஞ்சாவூர் சோழ மன்னனின் அரசவையில் கல்யாண சுந்தரம் என்பவர் குமாஸ்தாவாகப் பணிபுரிந்தார். அவர், ஆனை முகத்தோனின் தீவிர பக்தர். தினமும் விநாயகரைத் தன் மனத்தால் வழிபட்டுப் பின்பே தன் பணிகளில் ஈடுபடுவார்.

ஒருநாள் அவரது கனவில் தரிசனம் அருளிய விநாயகப்பெருமான்,

“என் தந்தையுடன் இணைந்த அம்சத்தில், வாரணவாசி கிராமத்தில் உசிலை மரத்தடியில் மண்ணுக்குள் நான் எழுந்தருளியிருக்கிறேன். என் திருவுருவச் சிலையைக் கண்டெடுத்து, அங்கு ஒரு கோயிலை எழுப்பிப் பிரதிஷ்டை செய்து வணங்கி வா. உனக்கு சகல செளபாக்கியமும் கிடைக்கும்” எனச் சொல்லி மறைந்தாராம்.

உடனே மெய்சிலிர்க்க கண் விழித்த கல்யாண சுந்தரம், விநாயகப்பெருமான் உரைத்த கட்டளையை நினைவுகூர்ந்து, வாரணவாசி கிராமம் நோக்கிப் பயணித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *