அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விக்ரம்; கிளம்பிய சர்ச்சை – வனத்துறை அதிகாரிகள் விசாரணை! | vikram lar gibbon controversy forest department investigation

Spread the love

நடிகர் சியான் விக்ரம், “லார் கிப்பான்’ என்ற அரிய வகை வெளிநாட்டு குரங்கினத்தைச் சேர்ந்த விலங்குடன் விளையாடி மகிழும் வீடியோ ஒன்றை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு காப்பாளர்கள் கடும் எதிர்ப்பையும் கவலையையும் தெரிவித்தனர்.

தென்கிழக்கு ஆசியாவை பூர்விகமாகக் கொண்ட லார் கிப்பான், அழிவின் விளிம்பில் உள்ள பாதுகாக்கப்பட்ட அரிய வகை உயிரினமாகும்.

இத்தகைய பாதுகாக்கப்பட்ட வெளிநாட்டு விலங்கைத் தனியார் இடத்தில் வளர்ப்பது சட்டப்பூர்வமானதா? அதற்கான உரிய ஆவணங்கள் மற்றும் வனத்துறை அனுமதி உள்ளதா? என்று கேள்விகள் எழுந்தன.

மேலும், பிரபலங்கள் இது போன்ற வீடியோக்களை வெளியிடுவது சட்டவிரோத வனவிலங்கு கடத்தலை ஊக்குவிக்கும் என்றும் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *