அர்ஜென்டினாவை அதிரவைத்த ஸ்பெயின்… 2வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன்! – Kumudam

Spread the love

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் மைதானத்தில்  23 வது உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற  ஸ்பெயின் அணிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கோப்பையை வழங்கினார். இதன் மூலம் 2 வது முறையாக சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் அணி வென்றுள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேரில் கண்டு களித்தார்.  மேலும் வெற்றி பெற்ற ஸ்பெயின் அணிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும், பிஃபா தலைவர் கியானி இன்பான்டினோவும் சேர்ந்து பிபா உலகக்கோப்பையை வழங்கினர்.

இறுதிப்போட்டிக்கான பதற்றம் களத்தில் எதிரொலிக்க  ஆட்டம் தொடங்கியது. முதலே இரு அணிகளும் கோல் கணக்கை தொடங்க தீவிரம் காட்டின. ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதேபோல் ஆட்டத்தின் 2 வது பாதியிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.  இதற்காக பல வாய்ப்புகள் உருவான போதிலும் இரு அணி வீரர்களாலும் கோலாக மாற்ற முடியவில்லை.‘

அதனைத் தொடர்ந்து 90 வது நிமிடங்களின் முடிவில் ஆட்டம்  இரு அணிகளும் கோல் அடிக்காமல் சமநிலையில் இருந்தது. இதன் காரணமாக கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.(90+3) நேரத்தின் போது அர்ஜென்டினா வீரர் என்சோ பெர்னான்டஸ் ரெட் கார்டு பெற்று வெளியேற்றப்பட்டார். இதன் காரணமாக ஆட்டத்தின் மீதியை அந்த அணி 10 வீரர்களுடன் விளையாடி வேண்டிய நிலை உருவானது.

தொடர்ந்து ஆட்டம் கூடுதலாக 30 நிமிடங்கள் வரை நீட்டிக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் வீரர் பெரான் டோரஸ் அடிக்க அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை  வகித்தது. இதனைத் தொடர்ந்து அர்ஜென்டினா அணி கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்ய அதிக முனைப்பு காட்டினர். ஆனால் அவர்களது கோல் அடிக்கும் முயற்சி  கடைசி வரைக்கும் தோல்வியில் முடிந்தது.

மறுபக்கம் கோல் அடித்த முன்னிலை பெற்ற ஸ்பெயின் அணி டிஃபென்ஸ் ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தியது. ஆட்டத்தின் இறுதிவரை அர்ஜென்டினா அணி கோல் அடிக்க தவறியது இதையடுத்து ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 23 ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *