“அவங்க கஷ்டப்பட்டு உருவாக்கிய பெருமையைக் காப்பாத்துவோம்!” – அக்‌ஷரா ஹாசன் | Aksharaa Haasan Speaks on Parents Kamal Haasan & Sarika’s Legacy

Spread the love

நானும் என் சகோதரி ஸ்ருதியும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து, எங்களால் முடிந்த சிறந்த உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்பதைப் பெற்றோர் புரிய வைத்தார்கள்.

அதனால், சில விஷயங்களில் நாங்கள் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டியிருக்கிறது. ஏனென்றால், எங்கள் பெற்றோர் தங்களின் சொந்த உழைப்பாலும் திறமையாலும் கஷ்டப்பட்டு உருவாக்கிய பெருமையையும் பாரம்பரியத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.

அதே நேரத்தில், எங்களுக்கு என்று தனித்துவமான இடத்தை உருவாக்கிக் கொள்ளவும், சுயமாகச் சாதிக்கவும் எங்களுக்கான சுதந்திரத்தை அளித்திருக்கிறார்கள்.

நாங்கள் எங்கிருந்து வந்தோம் என்பதை ஒருபோதும் மறக்கக் கூடாது; அதை நாங்கள் பாதுகாக்கவும் வேண்டும்.

அதே சமயம், நாங்கள் விருப்பப்பட்ட பாதையில் பயணிக்கும் சுதந்திரமும், பெற்றோரின் சரியான வழிகாட்டுதலும் கிடைத்ததால், எங்களால் எதையும் எளிதாகச் சாதிக்க முடிகிறது” எனப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *