ஏஐ வருவதைத் தடுக்க முடியாது, ஆனால் அதை ஒரு துணைக் கருவியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருக்கக் கூடாது.
ஏனென்றால், அதைச் சார்ந்து இருந்தால் லட்சக்கணக்கான மனிதர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நான்கு சுவருக்குள் உட்கார்ந்து கொண்டு ஏஐ மூலம் எல்லா உணர்ச்சிகளையும் உருவாக்கிவிட முடியாது.
மனித உணர்வுகளுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. ஏஐ மூலம் உருவாக்கப்படும் படைப்புகள் போலியானவை என்பதைப் பார்த்தவுடனேயே கண்டுபிடித்துவிடலாம். அது சுவாரஸ்யமாக இருக்காது” எனப் பகிர்ந்திருக்கிறார்.
தொடர்ந்து பேசியவர் கங்குலியாக நடிப்பது குறித்தும் பகிர்ந்திருக்கிறார். “நான் அவரை பலமுறை நேரில் சந்தித்துப் பேசினேன். கொல்கத்தாவில் உள்ள அவருடைய வீட்டிலும், ஈடன் கார்டன்ஸ் மைதானத்திலும் படப்பிடிப்பு நடத்தினோம்.
கங்குலி, தன் வாழ்க்கை பற்றி வெளியே சொல்லாத பல சுவாரஸ்யமான தகவல்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டார். இன்றைக்கு இந்திய கிரிக்கெட் அணி அடைந்திருக்கும் மாபெரும் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் அவர்தான்.
அவருடைய வாழ்க்கையில் வந்த பல கடினமான காலகட்டங்களையும், சரிவுகளையும் அவர் எப்படி எதிர்கொண்டு மீண்டு வந்தார் என்பதையும் இந்தப் படம் பேசும்” எனப் பேசினார்.