"அவரிடம் கேள்விகள் கேட்டுத் தொந்தரவு செய்து கொண்டே இருப்பேன்!" – 'தர்மன்' பற்றி ராஷி கன்னா

Spread the love

நடிகை ராஷி கன்னா தமிழில் ‘தர்மன்’ படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதைத் தாண்டி பாலிவுட்டிலும் பெரிய லைன்-அப்பை அவர் கையில் வைத்திருக்கிறார்.

சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் ‘தர்மன்’ திரைப்படம் தொடர்பாகவும், ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது குறித்தும், தன்னுடைய 13 ஆண்டுகால கரியர் குறித்தும் பேசியிருக்கிறார்.

raashi kanna | ராஷி கன்னா
raashi kanna | ராஷி கன்னா

‘தர்மன்’ படம் பற்றி அவர், “ரஜினிகாந்த் சாருடன் இணைந்து நடிப்பது மிகவும் அற்புதமான அனுபவமாக இருக்கிறது. படப்பிடிப்பின் போது அவர் எனக்கு ஒரு நண்பர் போல ஆகிவிட்டார்.

அவரிடம் நான் நிறையப் பேசுவேன், அடிக்கடி கேள்விகள் கேட்டுத் தொந்தரவு செய்து கொண்டே இருப்பேன். அந்த அளவுக்கு அவரிடம் சகஜமாக உணர்கிறேன். மிகவும் எளிமையான மனிதர் அவர்.

அவருடன் இருக்கும்போது ஒரு குழந்தையைப் போல உணர்கிறேன். படப்பிடிப்புத் தளத்தில் இருப்பதை மிகவும் ரசிக்கிறேன்” எனப் பேசியிருக்கிறார்.

தன்னுடைய 13 ஆண்டுகால கரியர் பற்றி அவர், “ஆரம்பகாலத்தில் எனக்கு வந்த வாய்ப்புகளை எல்லாம் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்டு நடித்து வந்தேன்.

ஆனால் இன்று, எதற்குச் சரி சொல்ல வேண்டும், எதற்கு நோ சொல்ல வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறேன். ரசிகர்களும் நடிகர்களிடமிருந்து சில விஷயங்களை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

ராஷி கன்னா
ராஷி கன்னா

ஒரே மாதிரியான கதாபாத்திரங்களைத் தொடர்ந்து செய்ய முடியாது. ஒரு நடிகராக நம்மை நாமே தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு, நடிப்புத் திறனை மெருகேற்றிக்கொண்டே இருக்க வேண்டும். முன்பை விட இப்போது நடிப்பின் மீது நான் அதிக அக்கறையுடன் இருக்கிறேன்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *