“அவரை எந்தக் கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது எனத் தெரிந்தது!” – இயக்குநர் சேரனின் பதிவு |director-cheran-shares-uncut-video-of-yaar-sari-show-and-slams-social-media-influencer-divakar

Spread the love

அந்தக் காணொளியைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் சேரன், “இதுவே உண்மையில் நடந்தது. அந்த நபரின் வாழ்க்கை கருதி அதை டெலிகாஸ்ட் செய்யாமல் தவிர்த்தோம். ஆனால் அவரே அதை வெளியில் கொண்டுவரக் காரணமாகிவிட்டார்.

முடிந்தவரை அமைதியாகப் பொறுமையாகத்தான் இருந்தோம். ஆனால் அவரை எந்தக் கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது எனத் தெரிந்தது.

சிலர் நான் அவரை அனுமதித்திருக்கவே கூடாது எனவும், சிலர் சேரனுக்கு இது தேவையா எனவும் கேட்கிறார்கள், சொல்கிறார்கள். ஒரு மனநோயாளி ரோட்டில் கிடப்பதைப் பார்த்துக் கடந்து செல்பவன் அல்ல நான்.

அவனைச் சரிசெய்து விடமாட்டோமா, இப்படியே விட்டால் எங்காவது அடிபட்டு ரோட்டில் கிடந்தால் பாவம் ஒரு உயிர் எனக் காப்பாற்றிப் புத்தி சொல்ல, சரிசெய்ய நினைப்பவன். ஒரு உயிர் போய்விட்டால் அவனை நம்பி உயிர்கள் இருக்குமே எனக் கவலைப்படுபவன் நான்.

அவர் பேசுவதால் என் படைப்புகள் தாழ்ந்துவிடப்போகிறதா என்ன? மரியாதை நான் காப்பாற்றும், கட்டிக்காக்கும் என் பெயரில் இல்லை; என் நடத்தையில் இருக்கிறது என நன்றாக அறிவேன். இதேநேரம் நாங்கள் அவரை வெளியேற்றியிருந்தால் இந்தச் சமூகம் இப்படித்தான் பேசுமா? அப்போதும் அவரை எப்படி அனுமதிக்காமல் விடலாம், சேரன் இப்படி நடக்கலாமா எனப் பேசித்தான் இருப்பார்கள்.

ஆகையால் நான் அங்கு நடந்துகொண்டது மனிதாபிமானமே. அது மற்றவர்கள் பார்வையில் புரியவில்லை என்பதற்காக நான் என்னைத் தொலைக்கத் தயாராக இல்லை” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *