ஆச்சி மனோரமா: 6 முதலமைச்சர்களுடன் நடித்த உலக சாதனை நாயகி! Aachi Manorama: The World Record Holder Who Acted Alongside Six Chief Ministers!

Spread the love

1. அண்ணா

திராவிட இயக்கத்தின் கொள்கைகளை நாடகங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் பேரறிஞர் அண்ணா. நாடகத் துறையில் மனோரமா நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில், அண்ணாவின் பல புகழ்பெற்ற நாடகங்களில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அண்ணா எழுதி, இயக்கி, நடித்த ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’, ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாடகங்களில் மனோரமா அவருடன் இணைந்து மேடையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

2. கருணாநிதி

நாடகத் துறையில் மனோரமாவின் திறமையைக் கண்ட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், மு.கருணாநிதி எழுதிய ‘மணிமகுடம்’ நாடகத்தில் நடிப்பதற்காக அவரை சென்னைக்கு அழைத்து வந்தார். மேலும், கலைஞர் கருணாநிதி எழுதிய ‘உதயசூரியன்’ என்ற நாடகத்தில் கலைஞரே கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடித்த பெருமையும் மனோரமாவையே சேரும்.

Manorama மனோரமா

Manorama மனோரமா

3. எம்.ஜி.ஆர்

நாடக மேடைகளில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த மனோரமா, எம்.ஜி.ஆருடன் பல வெற்றித் திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். ‘அன்பே வா’, ‘படகோட்டி’ போன்ற பல படங்களில் எம்.ஜி.ஆரின் நடிப்புக்கு ஈடுகொடுத்து நகைச்சுவையில் கலக்கியிருப்பார்.

4. ஜெயலலிதா

ஜெயலலிதாவுடன் பல திரைப்படங்களில் மனோரமா இணைந்து நடித்துள்ளார். ‘கந்தன் கருணை’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘பட்டிக்காடா பட்டணமா’ போன்ற திரைப்படங்களில் இவர்களின் நடிப்பு தனித்து நின்றது. இருவருக்கும் இடையே திரையைத் தாண்டி நிஜ வாழ்விலும் அக்கா – தங்கை போன்ற மிக நெருக்கமான பிணைப்பு இருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *