நடவடிக்கை இல்லாதது குறித்து கேள்வி
நவம்பர் 9-ஆம் தேதியே கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக சார்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டும், ஆட்சியரின் கணவர் தலைமைச் செயலாளருக்கும் முதலமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியும் இதுவரை எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்படவில்லை என ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். உள்கட்சி விசாரணையோ, அமைச்சரின் உறுதிமொழியோ சட்டப்பூர்வ குற்றவியல் விசாரணைக்கு மாற்றாகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பெண் சிறப்புப் படை மீது விமர்சனம்
பெண்கள் பாதுகாப்பிற்காக முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட “சிங்கப்பெண் சிறப்புப் படை’, ஆளும் கட்சி எம்.எல்.ஏ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முக்கியக் கோரிக்கைகள்
”சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீது உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும்.
உள்ளூர் காவல்துறை ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வின் செல்வாக்கிற்கு உட்பட வாய்ப்புள்ளதால், விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி, காவல் கண்காணிப்பாளர் (SP) அந்தஸ்திற்குக் குறையாத பெண் அதிகாரி தலைமையில் விசாரிக்க வேண்டும்.
வாட்ஸ்அப் செய்திகள், அழைப்பு விவரங்கள், ஆட்சியர் இல்லத்தின் சிசிடிவி காட்சிகள் மற்றும் பார்வையாளர் பதிவேடுகளை உடனடியாகப் பறிமுதல் செய்து பாதுகாக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர், அவரது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.