ஆட்டின் உடல் முழுக்க டாலர் நோட்டுகள்.. சாலையில் ஓடிய குட்டிக்கு கொடூரம்.. $10,000 அறிவித்தது ஏன்? | Goat Covered in Dollar Bills.. What Happened to the Animal on the Road? Why $10,000 Reward?

Spread the love

International

oi-Hema Vandhana

நியூயார்க்: அமெரிக்காவில் ஆட்டுக்குட்டி ஒன்றின் உடம்பு முழுவதும், டாலர் நோட்டுகளை ஒட்டி, அதை சாலையில் ஓடவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது… கடைசியில் அந்த ஆட்டுக்குட்டி என்ன ஆச்சு தெரியுமா? இதுதொடர்பான விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்… இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல் கொடுப்பவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர் வெகுமதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஹியாலியா என்ற பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.. வெஸ்ட்லேண்ட் மால் அருகிலுள்ள பார்க்கிங் ஏரியாவில், ஆட்டுக்குட்டி ஒன்று தனியாக ஓடிக்கொண்டிருந்தது.

Goat Rescue 10000 Reward Animal Abuse 10

ஆட்டுக்குட்டி – டாலர் நோட்டுகள்

அந்த ஆட்டின் உடம்பெல்லாம் டாலர் நோட்டுகள் ஒட்டப்பட்டிருந்தன… இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆடு அங்கும் இங்கும் ஓடியதுடன், வாகனங்கள் செல்லும் சாலையிலும் புகுந்தது… இதனால் அந்த இடமே பரபரப்பானது.. உடனே அங்கிருந்தவர்கள் இதனை வீடியோவும் எடுத்து, சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டனர்.

வீடியோவை பார்த்த பலரும் அதிர்ந்து போய்விட்டனர்.. இவ்வளவு சின்ன ஆட்டின் உடம்பில் பணத்தை ஒட்டி ஏன் இப்படி அலைய விட வேண்டும்? அந்த ஆட்டை யாராவது பிடித்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லுங்களேன் என்று பொதுவெளியிலேயே கவலையையும் தெரிவித்தனர்.

சாலையோரத்தில் கிடந்த ஆடு

ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே, அந்த ஆடு உயிரிழந்துவிட்டதாக இன்னொரு வீடியோ வெளியானது. சாலையோரத்தில் ஆடு இறந்து கிடக்கும் வீடியோவும் வைரலானது.. இதைப் பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, ஹியாலியா போலீசார் என்ன நடந்தது என்று விசாரித்தபோதுதான், அந்த ஆடு வாகனம் மோதி இறந்துவிட்டது தெரியவந்தது..

எனினும், அதன் உடலில் பணத்தை ஒட்டியது யார், எதற்காக இப்படி செய்தார்கள் என்பது குறித்து விசாரணையை போலீசார் மேற்கொண்டனர்.. ஆடு இறந்து கிடந்த இடத்துக்கு போலீசார் சென்று ஆய்வு செய்தனர். அப்போதுதான் அந்த ஆட்டுக்குட்டியின் பெயர் வாலர் என்பது தெரியவந்தது.

ஆனால், பொதுமக்களும், இணையவாசிகளும் ஆடு இறந்த வீடியோவை கண்டு மனம் துடித்தனர்.. அந்த ஆடு, சாலையில் இங்குமங்கும் திணறி ஓடும்போதே யாராவது காப்பாற்றியிருக்கலாமே? அநியாயமாக கொன்றுவிட்டார்களே? என்று கமெண்ட்களை பதிவிட துவங்கி விட்டனர்.

10,000 டாலர் வெகுமதி

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, மியாமி பீச் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சேத் ஆலன் என்பவர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆட்டுக்கு இந்த நிலையை ஏற்படுத்திய நபர் குறித்து யாராவது தகவல் தந்தால், அவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர் வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.9 லட்சம் ஆகும். ஆட்டுக்கு நேர்ந்த கொடுமையை பார்த்து மிகவும் வேதனை அடைந்துள்ளதாகவும், இதற்குக் காரணமானவர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அந்த தொழிலபதிபர் தெரிவித்துள்ளார்.

எனினும், ஆட்டின் உடலில் பணத்தை ஒட்டியது ஏன், இதன் பின்னணியில் வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்பது இன்னும் தெரியவில்லை. விசாரணை நடக்கிறது…!!!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *