ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்படும் பிரபலங்கள்… பின்னணி என்ன? – Kumudam

Spread the love

கட்டா குஸ்தி 2 ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வரும் நடிகர் விஷ்ணு விஷாலிடம், சமீபத்தில் உங்களுடைய முகம் ஏன் மிகவும் சோர்வாக இருக்கின்றது என்று ரசிகர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு, “கடந்த 3 – 4 ஆண்டுகளாக நான் ஆட்டோ இம்யூன்‘ (Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டு வருகிறேன். அதற்கான சிகிச்சையும் மருந்துகளும் உடலுக்கு மிகவும் அவசியமானவை என்பதால், அவற்றை முழுமையாகத் தொடர்ந்து எடுத்துக் கொண்டு வருகின்றன. மருந்துகளின் விளைவாகவே தனது முகம் மற்றும் உடலில் சோர்வு தெரிகிறது. இந்நோயின் போது உடலில் ஏற்படும் தொடர்ச்சியான வீக்கம் மற்றும் அதற்காக உட்கொள்ளும் மருந்துகள் மூலம் அதிக சோர்வு ஏற்படுகின்றன. இது சாதாரண சோர்வை விட நீண்டகால சோர்வை ஏற்படுத்துகின்றன. அந்த மருந்துகளின் பக்கவிளைவுகள் தான் என் முகம் சோர்வாக உள்ளதுஎன்று விளக்கம் அளித்துள்ளார்.

இதற்கு முன்னதாக நடிகை சமந்தாவும் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சமந்தாவுக்கு தசைகளில் அதிகப்படியான வலி, வீக்கம் ஆகியவை ஏற்பட்டிருக்கிறது. இதை பரிசோதித்து பார்த்த போதுதான், சமந்தா நாள்பட்ட ஆட்டோ இம்யூன் நோய்களில் ஒன்றான மயோசிடிஸ் (myositis) என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இந்த மயோசிடிஸ் என்னும் நோய் நம்முடைய உடல் தசைகளில் ஏற்படும் நோய்த் தொற்றால் ஏற்படுவது. இதனால் உடலின் தசைகள் வெகுவாக பலவீனமடையும். வலியும் அதிகமாக இருக்கும்.இவருக்கு முன்னதாக பல திரை பிரபலங்கள் இந்நோயால் பாதிப்பட்டிருந்தனர்.

 

பிரபலங்கள் பாதிப்பு

சமந்தா மட்டுமல்ல முன்னதாக இந்நோயால் பாதிக்கப்பட்ட  பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னுடைய திரைப்படம் ஒன்றின் ப்ரமோஷனுக்கு சென்றிருந்தார். அப்போது தனக்கு ஆட்டோ இம்யூன்  நோய் இருந்ததாகவும், அதில் ஒரு வகையான ட்ரைஜெமினல் நியூரால்ஜியா என்று கண்டறியப்பட்டதை பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

அவரை தொடர்ந்து ரியாலிட்டி டிவி ஷோ பிரபலமும் மாடலுமான கிம் கர்தஷியான் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆட்டோ – இம்யூன் குறைபாட்டால் சொரியாஸில் (psoriasis) நோயால் பாதிக்கப்பட்டார்.

சொரியாஸில் நோயால் பாதிக்கப்படும்போது சரியாக தூங்கவோ, இயல்பாக இருக்கவோ முடியாது. நாள்பட்ட ஆட்டோ இம்யூன் பிரச்சினையால் உண்டாகும் சொரியாசிஸ் வாழ்வை இயல்பாக வாழ முடியாமல் நிறைய சங்கடங்களை ஏற்படுத்தச் செய்யும்.

இந்த நோயால் தான் அடைந்த சங்கடங்கள் பற்றி 2021 ஆம் ஆண்டு தன்னுடைய வாழ்க்கை முறை குறித்து ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் கணவர் நிக்கி ஜோன்ஸ்க்கு 13 வயதாக இருந்த போது ஆட்டோ இம்யூன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

அமெரிக்க சூப்பர் மாடலான ஜிகி ஹடிட் ஆட்டோ இம்யூன் குறைபாடு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஹாஷிமோட்டோ என்று அழைக்கப்படும் ஒருவித தைராய்டிடிஸ் பாதிப்பு ஏற்பட்டதாக வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார். இது போன்ற பல திரை பிரபலங்கள் இந்த நோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆட்டோ இம்யூன் நோய் என்றால் என்ன?

ஆட்டோ இம்யூன் நோய்  என்பது நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே தவறுதலாக நம் உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களைத் தாக்கும் ஒரு தன்னுடல் தாக்கு நோய் என்று குறிப்பிடுகின்றனர்.

நோய்யின் தாக்கம்

ஆட்டோ இம்யூன் நோயின் தாக்கம் உடலைப் பாதுகாக்கின்ற நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனம் அடைய செய்து இதன்மூலம் , மூட்டு வலி, சோர்வு, தசை பலவீனம் மற்றும் உறுப்பு செயலிழப்பு போன்ற நீண்டகால பாதிப்புகள் ஏற்படுத்தும்.

 

பிரபலங்கள் பாதிக்கப்படுவது எதனால்?

 

திரை பிரபலங்கள் பாதிக்கப்படுவது குறித்து ஆராயும் போது கடுமையான வேலைப் பளு முறையற்ற தூக்கம், மன அழுத்தம் மற்றும் உடல் எடையை அடிக்கடி மாற்ற வேண்டிய கட்டாயம் ஆகிய காரணங்களால் அவர்களை இந்த நோய் உடனே தாக்கின்றனர். 

அதுமட்டுமில்லாமல் அதிகப்படியான ஒப்பனைப் பொருட்கள் (Makeup), லைட்டிங்ஸ் மற்றும் படப்பிடிப்புத் தளங்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உடலுக்கு நச்சுத்தன்மையை  விளைவிக்கக் கூடியதாக அமைக்கின்றது, இப்படி பல காரணங்களாலே குறிப்பாக நடிகர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

 

நோயில் இருந்து மீள முடியமா?

இந்த நோயிலிருந்து மீள வேண்டும் என்றால் நாம் உணவு முறைகளிலிருந்தே இதனை தடுக்க முடியும்.  அப்படி பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் க்ளூட்டன் (Gluten) ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

 

பழங்கள், காய்கறிகள், மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் (அவகேடோ, நட்ஸ்) போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளவும்.

குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த யோகர்ட், கிம்ச்சி போன்ற புரோபயாடிக் உணவுகளைச் சேர்க்கவும். மன அழுத்தம் (Stress) நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கும் என்பதால், தியானம் (Meditation), மூச்சுப் பயிற்சி (Breathwork) அல்லது யோகா மூலம் மனதை அமைதியாக வைத்திருக்கவும்.

தினமும் முறையான உடற்பயிற்சி செய்வது உடலின் செயல்பாடுகளைச் சீராக்க உதவும். இந்த நடைமுறைகளை எல்லாம் பின்பற்றி வந்தால் கட்டாயம் இந்த நோயிலிருந்து விடை பெற முடியும் என்று  குறிப்பிடுக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *