ஒரே நாளில், ஆந்திரப் பிரதேசத்தின் ரூ.5.35 லட்சம் கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு தொழிற்துறையின் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“ஒரே நாளில் ₹5.35 லட்சம் கோடி முதலீட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஆந்திரப் பிரதேசம் ஈர்த்துள்ளது!
இவற்றில் பெரும்பாலானவை தமிழ்நாடு போட்டியிட்டு வென்றிருக்க வேண்டிய வாய்ப்புகள்!
நேற்று, ஆந்திரப் பிரதேசம் அறிவித்த முதலீட்டு உறுதிமொழிகள்:
ரிலையன்ஸ் – ₹2.73 லட்சம் கோடி
கிரீன்கோ – ₹45,000 கோடி
கிளீன்மேக்ஸ் – ₹41,000 கோடி

மேகா – ₹36,000 கோடி
கியா – ₹18,878 கோடி
ராஷ்மி – ₹18,500 கோடி
ஜே.எஸ்.டபிள்யூ – ₹15,000 கோடி
கெயில் – ₹13,500 கோடி
மற்றும் பல நிறுவனங்கள்.
த.வெ.க அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், முந்தைய திமுக அரசால் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களைத் தாண்டிப் புதிய முதலீடுகளுக்கான திட்டங்கள் எங்கே?
வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், எந்தக் கூச்சமும் இல்லாமல் அந்தப் பழைய திட்டங்களையும் தங்களது சாதனையாக இந்த அரசு சொந்தம் கொண்டாடுகிறது.