ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான 3 பெண்களை விடுவிக்க கோரிய மனுக்களை விசாரிக்க முடியாது: நீதிமன்றம் மறுப்பு | Petitions seeking release of 3 women arrested in Armstrong murder case cannot be heard

1345842.jpg
Spread the love

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஞ்சலை உள்ளிட்ட 3 பெண்களை விடுவிக்கக் கோரிய மனுக்கள் மீது, தற்போதைய நிலையில் விசாரணை நடத்த முடியாது என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்பட 29 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பிரபல ரவுடிக்களான சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.

இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நாகேந்திரன், அஸ்வத்தாமன் ஆகியோர் காணெலி வாயிலாகவும், மற்றவர்கள் நேரிலும் விசாரணை ஆஜராகினர். பெருநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி, வேலூர் சிறையில் உள்ள நாகேந்திரனை புழலுக்கு மாற்றுவது குறித்து அடுத்த விசாரணையின்போது தெரிவிக்கப்படும் என்றார்.

அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் கைதாகி இருப்பவர்கள் தங்களுக்காக வழக்கறிஞர்களை நியமித்துக் கொள்ளாமல், வழக்கை இழுத்தடிக்க நினைக்கக் கூடாது. இலவச சட்ட உதவி தேவைப்படுவோர், சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலமாக வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தினார்.

மேலும், வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அஞ்சலை, பொற்கொடி மற்றும் மலர்க்கொடி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது தற்போதைய நிலையில் விசாரணை நடத்த முடியாது என்று மறுப்பு தெரிவித்த நீதிபதி, விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *