இன்ஸ்டாகிராம் செயலியில் நேரலை அம்சத்தை பயன்படுத்துபவர்களுக்கு அந்நிறுவனம் வரைமுறைகளை விதித்துள்ளது. இதன்படி, ஒரு கணக்கை ஆயிரம் பேர் பின்தொடர வேண்டியது (ஃபாலோயர்ஸ்) கட்டாயம் என இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது.
ஆயிரம் பேர் பின்தொடரவில்லை என்றால், அவர்களுக்கு நேரலை அம்சம் இருக்காது என அறிவித்துள்ளது. இந்த மாற்றங்களுக்குக்கான காரணம் குறித்து இன்ஸ்டாகிராம் தரப்பில் விளக்கம் அளிக்கப்படாத நிலையில், சமூக வலைதளங்களில் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியை உலகம் முழுவதும் 200 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். அதாவது, 200 கோடி கணக்குகள் இன்ஸ்டாகிராமில் உள்ளன.
புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை பதிவேற்றம் செய்வதோடு மட்டுமின்றி, பலர் வணிக நோக்கத்திலும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர். தங்கள் தயாரிப்புகளை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி விடியோக்களை பதிவிடுகின்றனர்.
இதனால், இளம் தொழில் முனைவோர்களுக்கு ஆரம்பக்கட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்களைச் சென்றடைய இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் பயன்படுகிறது.
இதனிடையே, ஆயிரம் ஃபாலோயர்கள் உள்ளவர்களுக்கு மட்டுமே நேரலை அம்சம் செயல்படும் என இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. ஆயிரம் பேர் பின்தொடர்பவர்கள் இல்லாதவர்களுக்கு நேரலை அம்சம் செயல்படாது எனவும் தெரிவித்துள்ளது.
என்ன காரணம்?
ஆயிரம் பேர் பின்தொடர்பவர்கள் இல்லையென்றால், நேரலை அம்சம் கிடையாது என்ற அறிவிப்புக்கு உரிய காரணத்தை இன்ஸ்டாகிராம் இதுவரை அறிவிக்கவில்லை. இது குறித்து இன்ஸ்டாகிராம் தலைமை செயல் அதிகாரி ஆதம் மொஸ்ஸெரியும் எந்தவித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.
நேரலை விவாதத்தின் எண்ணிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | அறிமுகமானது விவோ ஒய் 400! தள்ளுபடி விலையில் பெறுவது எப்படி?