அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, “ஆதிபராசக்தியை துர்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும். லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும். சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும்.
இதையொட்டியே நவராத்திரியின் முதல் மூன்று நாள் துர்கா தேவியையும், அடுத்த 3 நாள் லட்சுமியையும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியையும் வணங்குகிறோம்.
‘செய்யும் தொழிலே தெய்வம்’, ‘உழைப்பின் மூலமே வெற்றி’ என்பதை உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளமும், நலமும் பெற்று சிறப்போடு வாழ உளமார வாழ்த்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.