ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம் | Governor RN Ravi visits Delhi

1354822.jpg
Spread the love

ஆளுநர் ஆர்.என்.ரவி, 3 நாள் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி அவ்வப்போது சொந்த பணியாக டெல்லி செல்வதும், அதன்பின், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களைச் சந்திப்பதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில், நேற்று காலை 6.50 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன், ஆளுநரின் செயலர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரிகள் சென்றுள்ளனர்.

இந்த பயணம் வழக்கமானது என்று ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், மும்மொழிக் கொள்கை மற்றும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே கருத்து மோதல்கள் நிகழும் சூழலில் செல்வதால், மத்திய அமைச்சர்களை ஆளுநர் ரவி சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *