இடைத்தேர்தல்: "2 தொகுதிகளில் நடத்தலாம்; 3 தொகுதிகளுக்கு வழக்கு முடியட்டும்" – உயர் நீதிமன்றம்

Spread the love

திருச்சி கிழக்கு உள்பட 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்துவந்தது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜூலை 10ஆம் தேதியன்று வந்த போது நீதிபதிகள், வழக்கு நிலுவையில் இருக்கும் போது தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடக்கூடாது எனக் குறிப்பிட்டு திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர். அதனால், மதுராந்தகம், தராபுரம் தொகுதிகளுக்கும் மட்டும் இடைத்தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், தற்போது அந்த வழக்கு தொடர்பாக அடுத்தக்கட்ட விசாரணை இன்று நடைபெற்றது. அதில், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை நீக்கி உத்தரவிட்டிருக்கிறது.

மேலும், மீதமிருக்கும் கரூர், விராலிமலை, திருச்சி கிழக்கு ஆகிய 3 தொகுதிகளுக்கும் வழக்கு முடிவுக்குப் பிறகு தேர்தல் நடத்தலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில், கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ் பாபு மறைவையொட்டி கொளத்தூர் தொகுதியிலும் இடைத்தேர்தலுக்கான சூழல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *