“இது ஒரு நிச்சயமற்ற உலகம். இது வெறும் வார்த்தையல்ல…” – அமைச்சர் ஜெய்சங்கர் | “This is an uncertain world. This is not just a word…” – Minister Jaishankar |

Spread the love

உலகமயமாக்கல் மற்றும் விநியோகப் பாதுகாப்பின்மை ஆகியவற்றின் அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் பிற நாடுகள், தங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேவைகளுக்காக, எதிர்பாராத அனைத்து சிக்கல்களுக்கும் எதிராகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலம் பதிலளிக்கின்றன.

உலகளாவிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு தற்போது சீனாவில் நடைபெறுகிறது. இது, விநியோகச் சங்கிலிகளின் “மீள்தன்மை (Resilience)’ மற்றும் ‘நம்பகத்தன்மை’ ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

உலகளவில் நடந்துவரும் மோதல்கள் மற்றும் காலநிலை மாற்ற நிகழ்வுகள் போன்றவை விநியோகச் சங்கிலியில் இடையூறு ஏற்படும் சாத்தியத்தை அதிகரித்திருக்கின்றன.

அமைச்சர் ஜெய்சங்கர்

அமைச்சர் ஜெய்சங்கர்
Jaishankar x page

இந்தியா தற்போது நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள், எரிசக்தி மற்றும் மின்சாரம் போன்ற உள்கட்டமைப்புகளின் அடிப்படையில் சில வெற்றிகரமான ஆசிய பொருளாதாரங்களுடனான இடைவெளியை வேகமாகக் குறைத்துவருகிறது.

எந்தத் தரநிலைகளின்படி பார்த்தாலும் நாம் இப்போது முன்னேறி வருகிறோம். இந்தியாவால் ஏற்படும் முன்னேற்றங்களை உலகம் கவனித்து வருகிறது. எனவே, இதைக் கருத்தில்கொண்டு, இன்று நாம் புதிய வர்த்தக ஏற்பாடுகளை உருவாக்கவும் மற்றும் புதிய இணைப்பு முயற்சிகளை ஊக்குவிக்கவும் ஆலோசித்து வருகிறோம்.” எனத் தனது உரையை நிறைவு செய்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *