இது நியாயமா.. 4 இன்னிங்ஸில் 51 ரன்கள்.. துணைக் கேப்டன் பொறுப்பை சிறப்பா செஞ்சிருக்கீங்க திலக் வர்மா! | Tilak Varma: Tilak Varma Scored 51 runs in 4 innings against England which causes criticism by the Indian fans

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

பிரிஸ்டோல்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டன் திலக் வர்மா 8 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்திருக்கிறார். இந்த டி20 தொடரில் 4 இன்னிங்ஸில் ஆடியுள்ள திலக் வர்மா, மொத்தமாக 51 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். இதனால் துணைக் கேப்டன் பதவியில் இருந்து திலக் வர்மாவை நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணியின் சாயம் வெளுத்து வருகிறது. ஐபிஎல் தொடரில் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்களில் வெளுத்து கட்டிய இந்திய பேட்ஸ்மேன்கள், தற்போது இங்கிலாந்து மண்ணில் ஒரு அரைசதம் அடிப்பதற்கே திண்டாடி வருகின்றனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Tilak Varma

இன்றைய ஆட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே பொறுப்புடன் சூழலுக்கு ஏற்றவாறு ஆடினார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 48 பந்துகளில் 5 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 80 ரன்களை சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

ஆனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு உறுதுணையாக நிற்க வேண்டிய துணைக் கேப்டன் திலக் வர்மா 8 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த டி20 தொடரில் திலக் வர்மாவின் ஆட்டம் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஏனென்றால் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரிலேயே திலக் வர்மாவின் பேட்டிங் இந்திய அணிக்கு பின்னடைவை உருவாக்கியது.

தற்போது இங்கிலாந்து மண்ணில் இருக்கும் எக்ஸ்ட்ரா பவுன்ஸை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல், பொறுப்பின்றி ஆடி வருகிறார். எப்படி விளையாட வேண்டும் என்று ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு ப்ளூபிரிண்டை எதிரில் நின்று காட்டிய போதும், ஸ்லோயர் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறி இருக்கிறார் திலக் வர்மா.

இந்த டி20 தொடரில் 4 இன்னிங்ஸிலும் சேர்த்து வெறும் 51 ரன்களை மட்டுமே திலக் வர்மா சேர்த்துள்ளார். திலக் வர்மாவிடம் போதுமான அதிரடி ஆட்டம் இல்லை என்பதோடு, மிடில் ஆர்டரில் எப்படி ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதையே இன்னும் புரிந்து கொள்ளவில்லை. இதனால் துணைக் கேப்டன் பொறுப்பில் இருந்து திலக் வர்மாவை நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *