இதே வேலைதான் டிரம்புக்கு! ஈரான் விஷயத்தில் பேக் அடித்த அமெரிக்கா! இந்தியாவுக்கு பெட்ரோல் கிடைக்குமா? | Trump Halts Iran Strikes to Pursue Diplomatic Deal on Hormuz and Nuclear Program

Spread the love

International

oi-Halley Karthik

தெஹ்ரான்: ஈரான் மீது நடத்தப்பட்டு வந்த தாக்குதல்களை நிறுத்த உத்தரவிட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். அட்டாக்கை தொடங்குவதும், நிறுவத்துவதுமாக அமெரிக்கா ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில் டிரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு தடையின்றி பெட்ரோல், டீசல் கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

ஈரான் விஷயத்தில் ஒப்பந்தம் ஃபைனாலாகி வருகிறது, அதனால்தான் தாக்குதலை நிறுத்த சொல்லியிருக்கிறேன் என்று டிரம்ப் கூறியிருக்கிறார். டிரம்பின் பிளான் என்ன? இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் பழையபடி கிடைக்குமா? விரிவாக பார்ப்போம்!

Trump

ஈரானுடன் ஒப்பந்தம்

ஒப்பந்தம் என்கிற கதையை பலமுறை அமெரிக்கா சொல்லியிருக்கிறது. இதோ கையெழுத்தாகிறது.. அதோ ஃபைனலாகிறது என்று சொல்லி தாக்குதலை நிறுத்துவதும் மீண்டும் தொடர்வதும் அடிக்கடி நடக்கும் விஷயம்தான். அந்த வகையில் இந்த முறை கையெழுத்தாக உள்ள ஒப்பந்தம் என்ன? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

இந்த கேள்விகளுக்கு எல்லாம் டிரம்ப் வெளிப்படையாக பதில் சொல்லவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தானால் ஹார்முஸ் நீரிணை மீண்டும் இயல்பு நிலைக்கு வரும். சர்வதேச சரக்கு கப்பல்கள் எந்தவித தொந்தரவும் இல்லாமல் இதில் இயல்பாக பயணிக்கும் என்று கூறியிருக்கிறார். இதற்கு முன்னர் இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தங்களை விட.. இது மிகவும் சீக்கிரமாக கையெழுத்தாக இருப்பதாகவும், எனவேதான் இதற்கு ஓகே சொல்லி அட்டாக்கை ஸ்டாப் செய்து வைத்திருப்பதாகவும் டிரம்ப் தரப்பில் சொல்லப்படுகிறது.

இதுபோக.. பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று ஈரான், சவுதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தியிருந்ததும், தாக்கதலை அமெரிக்கா நிறுத்த முக்கிய காரணம். இதில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் ரோல் மிக முக்கியமானது. மேலும் அமெரிக்காவின் அடாவடியான நடவடிக்கைகளால் பெட்ரோல், டீசல், எல்என்ஜி உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. இதுவும் டிரம்புக்கு நெருக்கடி கொடுத்திருப்பதால், பேச்சுவார்த்தைக்கு ஓகே சொல்லியிருக்கிறார்.

டிரம்ப் சொல்லும் ஒப்பந்தத்தின் முக்கியமான அம்சமே, ஈரானின் அணுசக்தி திட்டங்களால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் சீக்கிரம் முடிவுக்கு வரும் என்பதுதான். ஆனால், அப்படியெல்லாம் எதையும் டிரம்ப் எங்களிடம் சொல்லவில்லை என்று ஈரான் அதிகாரிகள் பகீர் கிளப்பியிருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தைக்கு நாங்கள் கூப்பிட்டது உண்மைதான். ஆனால், அணுசக்தி திட்டம் குறித்தும், அதை நாங்கள் குறைத்துக்கொள்வோம் என்பது குறித்தும் இப்போது வரை எந்த வாக்குறுதியையும் தரவில்லை. எனவே இதை ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு வந்தால் வரட்டும்.. இல்லையெனில் தாக்குதலுக்கு நாங்கள் பதில் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியிருக்கிறார்.

சரி நீங்க எப்படியாவது போங்க.. எங்களுக்கு பெட்ரோல் வருமா? என்று இந்தியா தரப்பில் கேள்விகள் எழுந்து வருகின்றன. போர் சுமூகமாக முடிவுக்கு வந்தால்.. E20 எனும் பிரச்சனையிலிருந்து இந்தியார்கள் தப்பித்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியும் இதெல்லாம் நடக்க.. குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *