தனுஷுடன் இத்தனை ஆண்டுகள் இணைந்து நடிக்காதது குறித்து வடிவேலு இந்தப் பட பூஜையில் பேசியிருக்கிறார்.
அவர் பேசுகையில், “நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷுடன் இணைந்து பணியாற்றும் சிறந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. ‘இத்தனை ஆண்டுகள் ஏன் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை, ஏன் இந்த இடைவெளி?’ என்று நீங்கள் கேட்கலாம்.
நாங்கள் இருவரும் சேரக் கூடாது என்று நினைத்த சில சக்திகள், எங்களுக்கு இடையே தேவையில்லாத மனக்கசப்புகளை ஏற்படுத்திவிட்டன.
ஒரு சிறிய தீப்பொறியைப் பற்றவைத்து, அதை மிகப்பெரிய நெருப்பாக மாற்றி எங்களுக்கு இடையே தூக்கிப் போட்டுவிட்டார்கள்.
ஒரு மூன்றாவது நபரால் தான் இந்த இடைவெளி உருவானது. இந்தப் படத்தின் பூஜை விழாவைப் பார்த்தால் ஏதோ பெரிய ‘மாநாடு’ நடப்பது போல இருக்கிறது.” எனப் பகிர்ந்திருக்கிறார்.