இந்த விருதினை பெற்று சொந்த ஊர் திரும்பிய அவருக்கு முன்னாள் ராணுவத்தினர், ஊர் பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் என அனைவரும் திரண்டு நின்று தாரை தப்பட்டை முழங்க, வான வேடிக்கைகள் வெடிக்க, மலர் மாலை, பொன்னாடை போர்த்தி கௌரவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
இந்திய நாட்டின் உயரிய விருதான கீர்த்தி சக்கரா விருது தன் கிராமத்து ராணுவ வீரருக்கு கிடைத்தது கிராம மக்களிடையே எல்லையற்ற மகிழ்ச்சி என ஏற்படுத்தியுள்ளது.

வழிநெடுகிலும் பொதுமக்கள் அவருக்கு சால்வை அணிவித்தும் மாலை அணிவித்தும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.
இது குறித்து மீனாட்சி சுந்தரம் பேசுகையில், ‘எந்த நிலையிலும் களத்தில் பயங்கரவாதிகளை வீழ்த்த வேண்டும் என்பது மட்டுமே ஒரு ராணுவ வீரனின் எண்ணமாக இருக்கும். நாட்டிற்காக ரத்தம் சிந்தியதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இந்த விருது பெற்றது எனக்கும் என்னைச் சார்ந்த குடும்பத்தார் மற்றும் ஊருக்கும் மிகப்பெரிய பெருமையாக இருக்கிறது என மீனாட்சி சுந்தரம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.