இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ஐடி நிறுவன சிஇஓ யார்..? டெக் மஹிந்திரா CEO சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Highest Paid IT CEO in India 2026: Infosys Salil Parekh Tops With Rs 82.6 Crore; Tech Mahindra Mohit Joshi at Rs 67.55 Crore

Spread the love

Business

oi-Prasanna Venkatesh

இந்திய ஐடி துறையில் சம்பள விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. டெக் மகிந்திரா நிறுவனத்தின் CEO மோஹித் ஜோஷி-யின் சம்பளம் விபரம் வெளியாகியுள்ளது மூலம் இந்தியா ஐடி நிறுவன சிஇஓ-க்களில் யார் அதிகப்படியான சம்பளம் வாங்குகிறார்கள் என்ற போட்டி வெடித்துள்ளது.

இந்திய ஐடி நிறுவனங்கள் தனது மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு, கடந்த நிதியாண்டுக்கான செயல்திறன் ஆய்வை முடித்து வரும் வேளையில், சிஇஓக்களின் போன்ஸ் தொகையுடன் கூடிய சம்பள விபரங்கள் கடந்த 2 மாதங்களாக வெளியாகி வருகிறது.

IT Infosys CEO TCS tech mahindra Highest paid IT CEO India 2026 Salil Parekh remuneration Mohit Joshi salary Tech Mahindra Infosys CEO pay FY26 Tech Mahindra CEO compensation Indian IT CEOs salary comparison Salil Parekh highest paid Mohit Joshi ESOP gains TCS CEO salary Wipro CEO remuneration 2026 ESOP

மோஹித் ஜோஷி

இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய டெக் மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மோஹித் ஜோஷி, 2025-26 நிதியாண்டில் மொத்தம் ரூ.67.55 கோடி ஊதியம் பெற்றுள்ளார். மோஹித் கடந்த ஆண்டு பெற்ற சம்பளத்தை காட்டிலும் 11.76% அதிகமாகும்.

மோஹித் ஜோஷியின் மொத்த ஊதியம் 5.40 மில்லியன் பவுண்ட், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.67.55 கோடி ஆகும். இதில் சம்பளம் 1.36 மில்லியன் பவுண்ட், செயல்திறன் ஊக்கத்தொகை மற்றும் போனஸ் 1.11 மில்லியன் பவுண்ட், மற்றும் பங்கு விருப்புரிமை (ESOP) மூலம் கிடைத்த 2.93 மில்லியன் பவுண்ட் ஆகியவையும் அடங்கும்.

பொதுவாக இந்திய ஐடி நிறுவனங்களின் சிஇஓக்கள் அவர்கள் பணியாற்றும் இடத்திற்கு ஏற்ப சம்பளம் வாங்குவார்கள், அமெரிக்காவில் இருந்து பணியாற்றினால் டாலரில், இந்தியாவில் இருந்து பணியாற்றினால் ரூபாய் மதிப்பில். அந்த வகையில் மோஹித் ஜோஷி பிரட்டன் நாட்டின் லண்டனில் இருந்து பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் மோஹித் ஜோஷி பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்தைத் தவிர்த்தால், அவரது சம்பளம் 20.39% அதிகரித்துள்ளது. 2025-26 நிதியாண்டில் அவருக்கு 1,97,718 பங்குகள் வழங்கப்பட்டன. அதே நேரத்தில் 2,35,364 பங்குகளை விற்பனை செய்தார். இதன் மூலம் முந்தைய ஆண்டு அவரது சம்பளம் ரூ.52.1 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ யார்..?

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் இன்போசிஸ் CEO சலில் பரேக் அதிக ஊதியம் பெற்ற தலைவராக உள்ளார். அவர் 2025-26 நிதியாண்டுக்கு ரூ.82.6 கோடி ஊதியம் பெற்றுள்ளார். இதில் நிலையான சம்பளம் ரூ.8.5 கோடியும், வேரியபிள் பே மற்றும் ஊக்கத்தொகை ரூ.23.35 கோடியும் அடங்கும்.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் CEO கே. கிருதிவாசன் ரூ.28 கோடி ஊதியம் பெற்றுள்ளார். விப்ரோ CEO ஸ்ரீனிவாஸ் பல்லியா ரூ.49.6 கோடி ஊதியம் பெற்றுள்ளார். எல்.டி.ஐ மைண்ட்ட்ரீ CEO வேணு லாம்பு ரூ.27.26 கோடி ஊதியம் பெற்றுள்ளார்.

இன்போசிஸ் CEO சலில் பரேக் மற்றும் அந்நிறுவன ஊழியர்களின் சராசரி ஊதியத்தை விட 742 மடங்கு அதிக ஊதியம் பெற்றுள்ளார். பங்கு லாபத்தைத் தவிர்த்தால் இந்த விகிதம் 289 மடங்கு ஆகும். டிசிஎஸ் CEO-வின் ஊதியம் ஊழியர்களின் சராசரி ஊதியத்தை விட 332.8 மடங்கு அதிகமாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *