இந்தியாவில் AI தொழில்நுட்பத்துக்கு தனிச்சட்டம்? மத்திய அரசு தீவிர ஆலோசனை! – Kumudam

Spread the love

குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி காரணமாக டீப்‌ஃபேக் (Deepfake) வீடியோக்கள், தவறான தகவல் பரவல், இணைய மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது அமலில் உள்ள தகவல் தொழில்நுட்ப (IT) சட்டங்கள் மட்டுமே இத்தகைய புதிய சவால்களை எதிர்கொள்ள போதுமானதாக இல்லை என மத்திய அரசு கருதுவதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கான நெறிமுறைகள், பொறுப்புகள், தரவு பாதுகாப்பு, உள்ளடக்கங்களின் நம்பகத்தன்மை, டீப்‌ஃபேக் தடுப்பு மற்றும் இணைய பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய விரிவான புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

புதிய சட்டம் அமலுக்கு வந்தால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பயன்பாட்டை உறுதி செய்வதோடு, டிஜிட்டல் சூழலில் மக்களின் உரிமைகள் மற்றும் தனியுரிமையையும் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *