இந்தியா வரவிருந்த நார்வே பத்திரிகையாளரின் விசா ரத்து; அரசியல் கட்சிகள் கண்டனம் – இதுதான் காரணமா? |Norwegian Journalist’s Visa to India Revoked Political Parties Condemn the Move

Spread the love

இது குறித்து ஹெல் லிங் தனது எக்ஸ் பதிவில்,

நார்வேயில் உள்ள இந்திய தூதரகத்தால் வழங்கப்பட்ட தனது விசா ரத்து செய்யப்பட்டது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், விமான நிலையத்திற்கு செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் தனது விசா ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு செல்ல அமித் ஷா தன்னை அனுமதிப்பார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி கண்டனம்

ஹெல் லிங் விசா ரத்து செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடி நார்வே நாட்டிற்கு சென்றிருந்த போது ஹெல் லிங் அவரிடம் கேள்வி கேட்க முயன்ற சம்பவத்தைக் குறிப்பிட்டு, அரசு ஏன் கேள்விகளை கண்டு அஞ்சுகிறது ? என கண்டனம் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

பிரதமர் மோடியை கேள்வி கேட்டது மட்டுமே ஹெல் லிங் செய்த குற்றமாக தெரிகிறது!

இது தொடர்பாக இந்திய பதிப்பாளர்கள் சங்கம் ( Editors Guild of India ) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் மோடியை கேள்வி கேட்டது மட்டுமே ஹெல் லிங் செய்த குற்றமாக தெரிகிறது. மேலும், கடைசி நேரத்தில் ஹெல் லிங்கின் விசா ரத்து செய்யப்பட்ட காரணம் குறித்து புரிந்துகொள்ள முடியவில்லை. இத்தகைய நடவடிக்கைகள் அதிகாரத்துவத்தின் அத்துமீறலை காட்டுவதோடு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்ற பிம்பத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பேச்சு சுதந்திரம் என்பது, எல்லா ஜனநாயக நாடுகளும் கடைபிடிக்கும் கொள்கைகளில் ஒன்றாகும். இது அரசியலமைப்பு சட்டம் 19 (a)(1) -ன் படி அடிப்படை உரிமையாகும். ஹெல் லிங்கின் விசா ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்களை அரசு தெரிவிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *