“இந்தியா உலக அரங்கில் ஒரு வலிமைமிக்க நாடாக மாறுவதையும், மறுமலர்ச்சி அடைவதையும் சில சக்திகள் விரும்பவில்லை’ என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருக்கிறார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “இந்தியா இப்போது மறுமலர்ச்சியை நோக்கிய திசையில் பயணிக்க வேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற ஆசை அனைவரிடமும் உள்ளது.

ஆனால் இந்தியா உலக அரங்கில் ஒரு வலிமைமிக்க நாடாக மாறுவதையும், மறுமலர்ச்சி அடைவதையும் சில சக்திகள் விரும்பவில்லை.
இந்திய மக்களிடையே பிரிவினையை உண்டாக்க சிலர் நினைக்கிறார்கள். மிகச் சிறிய விஷயங்களைக்கூட பெரிதாக்கி, நாட்டில் ஒருவித அமைதியின்மையை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருகின்றன.