இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் தொடர்.. எத்தனை மணிக்கு போட்டி தொடங்கும்? எந்த சேனல், ஓடிடியில் ஒளிபரப்பு? | IND vs WI: When and Where will be the Live Streaming of India vs West Indies 1st ODI Match

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இந்தியாவில் நடக்கவுள்ள இந்த ஒருநாள் தொடர், எந்த மைதானத்தில் எத்தனை மணிக்கு தொடங்குகிறது என்பதையும், எந்த சேனலில் நேரடி ஒளிபரப்பாகிறது என்பதையும் பார்க்கலாம்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கவுள்ளது. இந்திய ஒருநாள் அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், டி20 அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும் செயல்பட உள்ளனர். ஏற்கனவே இந்த ஒரு தொடர்களுக்குமான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

India vs West Indies Virat Kohli Ruturaj Gaikwad

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய டி20 அணி பங்கேற்று இருப்பதால், நட்சத்திர வீரர்கள் பலரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவில்லை. ஆனால் அவர்களுக்கும் சேர்த்து விராட் கோலி, ரோகித் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் ஒருநாள் தொடர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

செப்டம்பர் 27ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி திருவனந்தபுரம் மைதானத்திலும், செப்டம்பர் 30ஆம் தேதி 2வது ஒருநாள் போட்டி கவுகாத்தியிலும், அக்டோபர் 3ஆம் தேதி 3வது ஒருநாள் போட்டி சண்டிகரிலும் நடக்கவுள்ளது. இதன்பின் அக்டோபர் 6 முதல் அக்டோபர் 17 வரை டி20 கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இது முழுக்க முழுக்க இந்திய மண்ணில் நடக்க இருக்கிறது.

ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3 போட்டிகளும் மதியம் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. மதியம் 1.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு 30 நிமிடங்கள் இடைவெளிக்கு பின் மதியம் 2 மணிக்கு ஆட்டம் தொடங்கப்படும். அதேபோல் டி20 கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளும் மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இர்வு 7 மணிக்கு தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிகள் அனைத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. அதேபோல் ஓடிடியை பொறுத்தவரை ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அண்மையில் ஃபேன்கோடு செயலிலில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் ஒளிபரப்பாகின. அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *